• Latest News

    September 28, 2014

    பொத்துவிலில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்: சர்வதேச கூட்டுறவு நிதி திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம பிரதம அதிதி

    எம்.ஐ.எம்.அஸ்ஹர்;
    கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு , சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் ஆகியன இணைந்து சர்வதேச சுற்றுலா தினத்தை நேற்றுமுன்தினம் ( 27)  பொத்துவிலிலுள்ள அறுகம்பையில் மிகவும் விமரிசையாக கொண்டாடியது.

    சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு நிதி திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம பிரதம அதிதியாகவும் , இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் கௌரவ அதிதியாகவும் , உணவு போசாக்கு அமைச்சர் பீ.தயாரெட்ன , தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் விஜயசேகர , கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம , கிழக்கு மாகாண
    முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் , கிழக்கு மாகாண சுற்றுலாதுறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , பொ்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸர்ரத் , பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் , இராணுவ அதிகாரிகள் , கடற்படை உயர் அதிகாரிகள் , விமானப்படை உயர் அதிகாரிகள் , பொலிஸ அதிகாரிகள் , சுற்றுலாத்துறை சார் பிரமுகர்கள் என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

    அதிதிகள் பொல்லடி மற்றும் அம்பாறை பண்டாரநாயக பாளிகா மகளிர் கல்லூரி மாணவிகளின் பாண்ட் வாத்தியம் என்பவற்றுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

    சுற்றுலாத்துறையில் சேவையாற்றிவரும் உல்லாச ஹோட்டல் உரிமையாளர்கள் பாராட்டப்பட்டதுடன் அம்பாறை சேனாகம மத்திய கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

    அறுகம்பை பசுபிக் ஹோட்டலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளினட் போது ஹோட்டல் வளாகத்தில் தொழில் சந்தையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.










    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவிலில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்: சர்வதேச கூட்டுறவு நிதி திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம பிரதம அதிதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top