• Latest News

    September 26, 2014

    பசிலின் அதிகாரம் பறிப்பு! ஆளும் கட்சியின் இறங்குமுகம் ஆரம்பம்



     பசிலின் அதிகாரம் பறிப்பு! ஆளும் கட்சியின் இறங்குமுகம் ஆரம்பம் ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இதுவரை இருந்த தனி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

    ஆளுங்கட்சிக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான ஜனாதிபதி மஹிந்த நாட்டில் இல்லாத சமயம் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை காலமும் ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்கள் என்பன அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. வேட்பாளர்களை தெரிவு செய்யும் விடயத்திலும் அவர்தான் அதிகாரம் செலுத்தினார்.

    இடைக்கிடை இந்த விவகாரங்களில் நாமல் ராஜபக்ஷவின் தலையீடு இருந்த போதிலும்இ ஏனைய அமைச்சர்கள் யாரும் தலையிட முடியாத அளவுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

    எனினும் ஊவா மாகாண சபைத் தேர்தல் பின்னடைவின் பின்னர் தற்போது நிலைமை மாறியுள்ளது. மேலும் சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் கட்சித் தலைவர் நாட்டில் இல்லாத சமயத்தில் முதல்முறையாக தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் நடத்தப்பட்டுள்ளது.

    இனிவரும் தேர்தல்களின் பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்கள் தொடர்பில் அமை்சசர் பசிலின் தனி அதிகாரத்துக்கும் இந்தக் கூட்டத்தில் வேட்டு வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அமைச்சர்கள் சுசில் பிரேம்ஜயந்த், மைத்திரிபால சிரிசேன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அடங்கிய குழுவே இனி தேர்தல் பிரச்சாரங்களுககு பொறுப்பாக இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    ஆளுங்கட்சியின் இறங்குமுகம் தொடங்கியுள்ள நிலையில் கட்சிக்குள் ராஜபக்ஷவினரின் பிடி தளர்ந்து வருவதை இச்சம்பவம் தெளிவாக்குகின்றது.
    theindependent.lk
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பசிலின் அதிகாரம் பறிப்பு! ஆளும் கட்சியின் இறங்குமுகம் ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top