
ஊவா மாகாணசபை தேர்தல் வன்முறைகளில் குறைவு ஏற்படாவிட்டால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று எச்சரித்துள்ளார்.
வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமது ஆதரவாளர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
இந்தநிலையில் ஊவா மாகாணத்தின் குறிப்பாக மொனராகலையில் வன்முறைகளை தடுக்க பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் உரிய பணிப்புரைகளை விடுக்க வேண்டும் என்று தேசப்பிரிய கேட்டுள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடங்கிய சட்டத்தரணிகளை கொண்டு குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment