• Latest News

    September 07, 2014

    ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே.கட்சியின் மறு ஐக்கியம்!

    பதுளை மாவட்டம் பசறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

    இவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தனது பேஸ்புக் வலைத்தளத்தில் ரணில், கரு, சஜித் ஆகியோர் கைகளை பிடித்து உயர்த்தி காண்பிக்கும் படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளடன் மில்லியன் கணக்கான ஐக்கிய தேசியக் கட்சியினரின் எதிர்பார்ப்பு என தலைப்பிட்டுள்ளார்.

    சஜித் பிரேமதாச இந்த மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

    பிரதித் தலைவர் பதவியை ஏற்க வேண்டுமாயின், தலைமைத்துவச் சபை கலைக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்திருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இது அவரது ஆதரவாளர்களை குழப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கான வதந்தி என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    கட்சியின் மறு ஐக்கியம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேசத்திற்கு கூடுதல் ஊக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

    கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் இருப்பதை காண விரும்புவதாக முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ ஏற்கனவே தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது தெரிவித்திருந்தார்.

    பிரதிதலைவர் பதவியின்போது சஜித்துக்கு முன்னுரிமை-  ரணிலின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டார் சஜித்

    ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் பதவி வழங்கப்படும் போது சஜித் பிரேமதாஸவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

    கட்சியின் 68வது சம்மேளன மாநாடு இன்று பதுளை பசறையில் இடம்பெற்றது.

    இதன்போது ஏற்கனவே பிரதி தலைவர் பதவியை வகித்தவர் என்ற வகையில் பிரதிதலைவர் பதவி நிரப்பப்படும் போது சஜித்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ரணில் குறிப்பிட்டார்.

    எனினும் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் ரணில் தெரிவித்தார்.

    இதேவேளை இந்த பரிந்துரைக்கு ரவி கருணாநாயக்க, தயா கமமே மற்றும் விஜயதாஸ ராஜபக்ச போன்ற தமது ஆதரவை வழங்க வேண்டும் என்று ரணில் கேட்டுக்கொண்டார்.

    ரணில் உரையை அடுத்து உரை நிகழ்த்திய சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமது தந்தையான பிரேமதாஸவுக்கு பிரதிதலைவர் பதவியை வழங்கியது போல ரணில் விக்ரமசிங்க தம்மை பரிந்துரைத்துள்ளார்.

    எனவே அதனை தாம் ஏற்றுக்கொள்வதாக சஜித் குறிப்பிட்டார்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே.கட்சியின் மறு ஐக்கியம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top