பி.எம்.எம்.ஏ.காதர்: செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் சமய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் 'பேஷ் இமாம்கள். மற்றும் கதீப்மாருக்கான சமய, சமூக உளவியல் கருத்தரங்கு' இன்று (07-09-2014) காலை 5.45 தொடக்கம் பி.ப 2.45 வரை மருதமுனை நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் மேல்மாடியில் செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் முஸ்னி இப்னு முகம்மது நாபி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஓமான் பல்கலைக்கழக பேராசிரியர் மருதமுனையைச் சேர்ந்த எச்.எம்.நஸீர் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன், வர்த்தகர் எம். ஐ.உபைத்துர்றஹ்மான்,ஆகியோர் கலந்து கொண்டனர். வளவாளர்களாக
மௌலவிகளான என்.ஜி.ஏ.கமால். எம்.எம்.கலாமுல்;லா, ஏ.எல்.எம்.றிப்கான், எம்.எச்.எம்.எஹியா, எப்.எம். அகமதுல் அன்சார் மௌலானா, கே.எல்.எம்.ஹனிபா விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.வஸீல் ஆகியோருடன் சிரேஸ்ட உதவிப்பதிவாளர் பி.எம்.முபீன், இளைஞர் சேவைஅதிகாரி எம்.ரி.எம்.ஹாறுன்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment