• Latest News

    September 21, 2014

    முஸ்லிம் கூட்டணி படு தோல்வி , UPFA வெற்றி , UNP , JVP -க்கு அதிகரித்துள்ள ஆசனங்கள்

    ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஆளும்தரப்பு முஸ்லிம் அமைச்சர்களான  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின்  ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) படு தோல்வியடைந்துள்ளது.

    பதுளை மாவட்டத்தில் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த கூட்டணி யால் எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்ற முடியவில்லை. பதுளை மாவட்டத்தில் இவர்களால் 5,045 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது .

    தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் பெறுபேறுகளின் பிரகாரம்
    UPFA :ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 349,906 வாக்குகள்   51.25 சதவீதம்  (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக) 19 ஆசனங்களை பெற்றுள்ளது
    UNP : ஐக்கிய தேசிய கட்சி – 274,773 வாக்குகள் 40.24 சதவீதம்   13 ஆசனங்களை பெற்றுள்ளது
    JVP : மக்கள் விடுதலை முன்னணி 36,580 வாக்குகள 5.36 சதவீதம் 2ஆசனங்களை பெற்றுள்ளது

    2009 ஆம் ஆண்டு  இறுதி முடிவு
    UPFA : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 418,906  72.39 (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 25 ஆசனங்களை   கைப்பற்றி இருந்தது
    UNP : ஐக்கிய தேசிய கட்சி – 129,144 வாக்குகள் சதவீதம் 22.32 சதவீதம்  7 ஆசனங்களை   பெற்று இருந்தது
    JVP: மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகள 2.53 சதவீதம்  1ஆசனத்தை மட்டும் பெற்றிருந்தது .
    மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகள 1.59 சதவீதம் 1ஆசனத்தை  பெற்றிருந்தது .
    கடந்த 2009 தேர்தலை விடவும் ஆளுங்கட்சிக்கு இம்முறை 69000 வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருப்பதோடு, அரசு இம்முறை 06 உறுப்பினர்களையும் இழந்துள்ளது. போனஸ் ஆசனம் உட்பட கடந்த முறை 25 ஆசனங்களை வென்ற பொதுஜன ஐக்கிய முன்னணி இம்முறை போனஸ் அடங்கலாக 19 உறுப்பினர்களை மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் 418,906 வாக்குகளைப் பெற்றிருந்த ஆளுந்தரப்பு இம்முறை 349,906 வாக்குகளையே பெற்றிருக்கிறது.
    இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த தேர்தல்களை விடவும் இம்முறை வீறுநடை போட்டுப் பிரகாசித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
    2009 தேர்தலில் 129,144 வாக்குகளைப் பெற்றிருந்த ஐ.தே.க இம்முறை 274,773 வாக்குகளைப் பெற்று 145,629 மேலதிக வாக்குகளால் தனது வாக்கு வங்கியை மெருகேற்றிக் கொண்டுள்ளது.
    ஐ.தே.க. இம்முறை 07 உறுப்பினர்களை மேலதிகமாகவும் ஈட்டிக்கொண்டுள்ளது. தவிர, கடந்த தேர்தலில் 14,639 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 21,941 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது. இம்முறை இரு உறுப்பினர்களோடு அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 36,580 ஆகும்.   இந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி, மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் வாக்குவங்கியில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
    இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இரு மாவட்டங்களிலும் 6076 (0.89) வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் ஆசனங்கள் எதனையும் அக் கட்சியால் பெற முடியவில்லை அதேவேளை அமைச்சர் விமல் வீரவன்சாவின் கட்சியும் தோல்வியை  தழுவியுள்ளது .
    பதுளை மாவட்டத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 209,056 வாக்குகளைப் பெற்று 09 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 197,708 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 20,625 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வசப்படுத்தியுள்ளன.

    பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 32,863 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 25,956 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 3,976 வாக்குகள்
    தேசிய சுதந்திர முன்னணி – 1,466 வாக்குகள்
    பதுளை மாவட்டம் வியலுவ தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 17,650 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 14,695 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 958 வாக்குகள்

    பதுளை மாவட்டம் பசறை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 23,188 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 16,426 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 800 வாக்குகள்

    பதுளை மாவட்டம் வெலிமடை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய தேசிய கட்சி – 23,046 வாக்குகள்
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 22,311 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 2,485 வாக்குகள்
    ஜனநாயக ஐக்கிய கூட்டணி – 2,363 வாக்குகள்

    பதுளை மாவட்டம் பண்டாரவளை தேர்தல் தொகுதியின்
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 27,365 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 27,085 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 2,300 வாக்குகள்

    பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய தேசிய கட்சி – 21,099 வாக்குகள்
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 15,001 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 2,271 வாக்குகள்
    ஜனநாயக ஐக்கிய கூட்டணி – 336 வாக்குகள்

    பதுளை மாவட்டம் ஹாலிஎல தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய தேசிய கட்சி – 23,900 வாக்குகள்
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 21,104 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 1,942 வாக்குகள்

    பதுளை மாவட்டம் ஊவா பரணகம தேர்தல் தொகுதி முடிவுகள்
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 19,127 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 18,930 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 2,545 வாக்குகள்
    தேசிய சுதந்திர முன்னணி – 1,160 வாக்குகள்

    பதுளை மாவட்டம் ஹப்புத்தளை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 21,637 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 19,297 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 1,261 வாக்குகள்
    மொனராகலை மாவட்டத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 140,850 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 77,065 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 15,955 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

    மொனராகலை மாவட்டம் வெல்லவாய தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 56,990 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 35,580 வாக்குகள்

    மொனராகலை மாவட்டம் பிபில தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 33,307 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 16,229 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 2,957 வாக்குகள்

    மொனராகலை மாவட்டம் மொனராகலை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 44,921 வாக்குகள்
    ஐக்கிய தேசிய கட்சி – 22,456 வாக்குகள்
    மக்கள் விடுதலை முன்னணி – 3,293 வாக்குகள்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் கூட்டணி படு தோல்வி , UPFA வெற்றி , UNP , JVP -க்கு அதிகரித்துள்ள ஆசனங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top