• Latest News

    October 29, 2014

    ஜமாத் இ இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை

    பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவதற்கு காரணமான 1971-ம் ஆண்டு போரின்போது, மனித உரிமைகளை மீறிய வகையில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக பங்களாதேஷைச் சேர்ந்த மதியூர் ரஹ்மான் நிஜாமி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பில் கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டின் சர்வதேச தலைமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

    ஜமாத் இ இஸ்லாமி என்ற இயக்கத்தின் தலைவரான மதியூர் ரஹ்மான் நிஜாமி(71) மீது சுமத்தப்பட்ட 16 முக்கிய போர்க் குற்றங்களில் 8 குற்றங்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை வழங்கி மூவரடங்கிய தலைமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    சுமார் 200 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பை வாசித்து முடிக்க தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி எனாயத்துர் ரஹீமுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் தேவைப்பட்டது.

    தீர்ப்பை அறிந்த மதியூர் ரஹ்மான் நிஜாமி, அதிர்ச்சியில் உறைந்துப் போன நிலையில் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜமாத் இ இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top