எஸ்.அக்தர்:
நிந்தவூர் கமுஃஅல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமைய்யா இல்லம் 85 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தை மரியம் இல்லமும், மூன்றாம் இடத்தை ஆஷியா இல்லமும் பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வுகளில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதீதியாகவும், மக்கள் வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.சம்சுதீன் சிறப்பு அதீதியாகவும், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.எம்.பாறூக் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment