• Latest News

    October 01, 2014

    அஷ்ரபினுடைய சாணக்கியமிக்க அரசியல் பாசறையில் வளர்ந்த பல அரசில்வாதிகள் தோற்றம் பெற்றிருக்கின்றார்கள்: ஏ.எச்.எச்.எம். நபார்

    எஸ்.அஷ்ரப்கான்:
    நற்பிட்டிமுனைக்கிராமத்தின் அரசியல் வரலாற்றில் பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் தோற்றம் பெற்று தேசிய அரசியலிலும் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியலிலும் பெரும் தந்தையாக பங்காற்றிய பெருந்தலைவர் அஷ்ரபினுடைய சாணக்கியமிக்க அரசியல் பாசறையில் வளர்ந்த பல அரசில்வாதிகள் தோற்றம் பெற்றிருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த மண் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.

    நற்பிட்டிமுனையின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட ஒன்றுகூடல் நேற்று (30) அவரது அலுவலகத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் தொடர்ந்தும் தனதுரையில்,

    நற்பிட்டிமுனைக் கிராமத்தினை தனது இதயத்தில் ஓடுகின்ற குருதியோட்டமாக வைத்துக்கொண்டிருந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்தது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்ல இந்த தேசத்தின் சிறுபான்மையினருக்கும் பெரும் இழப்பான ஒரு விடயமாகும்.
     
    நற்பிட்டிமுனைக் கிராமத்தினுடைய அரசியல், தொழில் விவகாரம், உட்கட்டுமான அபிவருத்தி விடயங்கள் என அனைத்து விடயங்களிலும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் எந்தளவிற்கு முக்கியத்துவம் வழங்கினாரோ அந்தளவிற்கு சமகாலத்தில் நற்பிட்டிமுனைக்கிராமத்தினுடைய மைதானம் அஷ்ரப் சதுக்கம் என்கின்ற அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தை மிக முக்கியமான வரலாற்று சான்றாக நாம் கருத வேண்டும்.

    அஷ்ரப் ஞாபகார்த்த மைதானம் என்பது அஷ்ரபினுடைய நாமத்தை வைத்து உருவாக்கப்பட்டது. அந்த நாமத்தை எடுத்து நோக்குகின்றபோது நற்பிட்டிமுனை ஜூம்ஆ பள்ளிவாயல் காணியும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், பள்ளிவாயல் தலைவருமான இஸ்மாயீலினுடைய காணிகளும் சாஹிபு முதலாளி என்பவருடைய காணியும், பொதுமக்கள் சிலரினுடைய காணிகளையும் தலைவர் அஷ்ரப் அவர்கள் அப்போது கொள்வனவு செய்து நற்பிட்டிமுனையில் ஒரு மைதானம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு அவரது அமைச்சினுடாக நிதி ஒதுக்கீடு செய்து மண் நிரப்பித்தந்தார். அதன் பிறகு கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சினுடைய அமைச்சராக இருந்த அமைச்சர் றவூப் ஹக்கிம் அவர்கள் அன்று அமைச்சராக இருந்தபோது அடித்தளமிடுவதற்கு நிதி ஒதுக்கியிருந்தார்.
     
    மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மையோன் முஸ்தபாவிடம் நற்பிட்டிமுனை இளைஞர்கள் முன்நின்று நிதி ஒதுக்குமாறு கேட்டபோது அதனூடாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு மைதானத்திற்கு அடித்தளமிடப்பட்டிருக்கின்றது ஆனால் சுற்றுமதிலில்லாமல் இருந்தபோது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் சுற்றுமதில் வாயில் கதவு என்பவற்றை பெற்றுத்தந்தார். அதன் பிறகு பார்வையாளர் அரங்கினை அமைச்சர் அதாவுள்ளாஹ் அவர்கள் 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியினை ஒதுக்கியிருந்தார். இவ்வாறு கட்டம் கட்டமாக வேலைகள் செய்யப்பட்டு இப்போது மைதான கட்டுமான வேலைகள் முடிகின்ற நிலையில் இறுதிக்கட்ட வேலைகளுக்காக அமைச்சர் அதாவுள்ளாஹ்வின் மூலம் பலத்த எதிர்பார்ப்பில் இப்பிரதேச விளையாட்டுக்கழங்கள், பிரதேசவாசிகளும் இருக்கின்றார்கள்.

    தற்போதைய முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்கள் மாநகர சபைக்குட்பட்ட மைதானம் என்ற அடிப்படையில் அபிவிருத்தியின் பங்கினை வழங்கிவருகின்றார்.

    எமது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள்  கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்கின்ற திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனைக் கிராமத்திற்கு பெரும் தொகையினை ஒதுக்கி வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது. இவற்றுக்கெல்லாம் மேலாக மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் பாசறையிலே தமது அரசியல் பணியினை செய்துகொண்டிருக்கின்ற தேசிய காங்கிரஸ் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அவர்களிடம் நான் முன்வைத்த கோரிக்கையினை ஏற்று இவ்விளையாட்டு மைதானத்தினை சுற்றி மின் விளக்குகளை பொருத்தி மின்சாரத்தினை வழங்க முன்வந்திருக்கின்றார். அதுபோல் நற்பிட்டிமுனையிலுள்ள குறைபாடுகளான கொங்கிறிட் பாதைகள் அமைத்தல், வறிய 50 குடும்பங்களுக்கு குடி நீர் வசதி பெற்றுக்கொடுத்தல், போன்ற பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் உதுமாலெப்பை இதனை வரும் ஒரு வருடத்திற்குள் தீர்த்துத் தருவதாக வாக்குறுதியளித்திருக்கின்றார்.

    சென்ற காலங்களில் அமைச்சர் அதாவுள்ளாவே நற்பிட்டிமுனையில் 10 இற்கும் மேற்பட்ட பாதைகளை போட்டுத்தந்துள்ளார். இப்படிப்பட்ட சாணக்கியம் படைத்த அரசியல்வாதிகள்தான் சமூகத்தில் வாழ வேண்டும். அரசில் காலங்களில் மட்டும் மேடைகளில் கூக்குரலிடுகின்ற அரசியல்வாதிகளை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். சமூக சேவகர்களை இனம்கண்டு அவர்களது கைகளை பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஷ்ரபினுடைய சாணக்கியமிக்க அரசியல் பாசறையில் வளர்ந்த பல அரசில்வாதிகள் தோற்றம் பெற்றிருக்கின்றார்கள்: ஏ.எச்.எச்.எம். நபார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top