• Latest News

    October 29, 2014

    கடுவலை பொதுச்சந்தைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

    பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால நேற்று  கடுவலை பொதுச் சந்தையின் நிர்மாணபணிகளை ஆரம்பிக்கும் முகமாக அடிக்கல் நடப்பட்டது.

    85 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கட்டடத் தொகுதியில், 300 கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்படும். இந்த நிர்மாணப்பணிகள் முப்படையினரால் மேற்கொள்ளப்படுகிறது.

    அத்துடன் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளரினால் 8 தபால் நிலையங்ளுக்கு 30 சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
    இந்நிகழ்வில் மகா சங்க, அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, அமைச்சர் விமல் வீரவங்ச, கடுவலை மேயர் புத்ததாஸ மற்றும் காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹர்ஸான் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடுவலை பொதுச்சந்தைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top