ஐக்கிய தேசியக் கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் சட்டத்திருத்த வரைபொன்று எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளது.
இதனை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு தொடர்பான நிபுணத்துவம் கொண்ட சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளார்.
இதில் உள்ள முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு,
நாட்டின் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார். அவர் எக்கட்சியும் சாராதவராக கடமையாற்றுவார். மேலும் நாட்டின் தலைவராகவும் இருப்பார்.இதனை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு தொடர்பான நிபுணத்துவம் கொண்ட சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளார்.
இதில் உள்ள முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு,
பிரதமர் நாடாளுமன்றம் மற்றும் அரசின் தலைவராக இருப்பார். அவரது ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயற்படுவார்.
அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கை 30க்குள் வரையறை செய்யப்படும்.
சபாநாயகர், பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புச்சபை உறுப்பினர்களாக இருப்பார்கள். சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள், பிரதம நீதியரசர், அரச நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் என்பன இவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
தேசிய பாதுகாப்புக்கு பாதகம் இல்லாத வகையில் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு எதிரான விசாரணைகளின் போது ஓய்வுபெற்ற மூன்று நீதியரசர்களின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் வகிக்கலாம்.
மேலும் பல விடயங்களும் விஜயதாச ராஜபக்ஷவின் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதுரலியே ரத்ன தேரரின் அரசியலமைப்புத் திருத்த வரைபை விடவும் இந்த வரைபு வரவேற்பைப் பெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

0 comments:
Post a Comment