கிழக்கு மாகாணத்தில் ஆண்டுதோறும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் ஆசிரியர் இடமாற்ற விவகாரத்திற்கு மிக நேர்த்தியான தீர்வுத் திட்டமொன்றை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ளது.
இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ் கையொப்பமிட்டு முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1994.10.06 ,ல் இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்ட பின்னர், கல்வி அமைச்சு 1995.03.11,ல் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்றத் தேசியக் கொள்கையானது, 2007. 12.13,ல் வெளியிட்ட தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைத் திட்டத்தின் மூலம் மாற்றத்திற்குள்ளானது.
இந்நிலையில், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அங்கத்துவமோ, ஆலோசனையோ இன்றி, கிழக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஆறு அதிகாரிகளை மட்டும் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட2011.08.11ஆம் திகதிய கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர் இடமாற்றக் கொள்கைத் திட்டமும், ஆசிரியர் சமப்படுத்தலும் இந்தச் சர்ச்சைக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராத நிலையில் பிறப்பிலேயே இறந்து விட்டது. அத னால், ஆசிரியர் இடமாற்றச்சர்ச்சை ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இதேவேளை, வருட மத்திய ஆசிரியர் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நட வடிக்கைகளையும், பரீட்சையையும் பாதிக்கும் என்பதால் வருட இறுதியில் மாத்திரமே ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெறல் வேண்டும் என்று ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் பணித்திருக்கும் நிலையில், கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தம் உத்தியோகபூர்வ பணிகளைக் கூடப் புறக்கணிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் இந்த ஆசிரியர் இடமாற்றச் சர்ச்சைக்குத் தீர்வாக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கின்றது.
மேலதிக ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடமின்றி, தம் சேவைக் காலத்திற்குள் இருவருட கஷ்டப் பிரதேச சேவைக்கு உட்படாத சகல ஆசிரியர்களும் இரு வருட கட்டாய சேவை இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.

இதற்கான பட்டியல் கிழக்கின் 17 கல்வி வலயங்களிலுமுள்ள கல்விக்கோட்ட ரீதி யாகத் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
அவ்வாறே பாடரீதியான ஆசிரியர் வெற்றிடப்பட்டியலும் கல்விக் கோட்ட ரீதி யாகத் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
தயாரிக்கப்பட்ட பட்டியலில் ,ருந்து, முன்னுரிமை அடிப்படையில், ஆண்டுதோறும், 40 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆசிரியர்கள் ஆண், பெண் இருபாலாரும், பாடவெற்றிடத்திற்கேற்ப, தினமும் சென்று திரும்பக்கூடியவகையில், 20 கிலோ மீற்றருக்குள், அருகிலுள்ள கல்விக் கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்;படல் வேண்டும்.
அருகிலுள்ள கல்விக்கோட்டத்திற்கு என்பது உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் கோட்டத்திலிருந்து பொத்துவில் கோட்டத்திற்கு, ஆலயடிவேம்பு கோட்டத்திலிருந்து திருக்கோயில் கோட்டத்திற்கு என ஆரம்பித்து, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கோட்டத்திலிருந்து திருகோணமலைக் கோட்டத்திற்கு, திருகோணமலைக் கோட்டத்திலிருந்து குச்சவெளிக் கோட்டத்திற்கு என அது அமைய வேண்டும்.
ஏனைய, 40 முதல் 55 வயது வரையிலான ஆசிரியர்கள் கல்விக் கோட்டத்திற்குள் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில், கல்வி வலய இடமாற்ற சபையின் ஒப்புதலுடன் வலயக் கல்விப் பணிப்பாளரினால் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.

இதன்போது, ,டமாற்றக் கடிதத்தில், புதிய பாடசாலைக்கான ,ருவருட சேவை யின் பின்னர், முன்னைய பாடசாலையில் கடமையைத் தொடரமுடியும் என்ற குறிப்பு ,டப்பட்டிருப்பின், குறித்த பாடசாலையின் சேவையை உறுதிப்படுத்திக் கொள்ள ஆசிரியருக்கும், அதிகாரிக்கும் உதவியாக ,ருக்கும்.
இந்த ஆலோசனையின் பிரகாரம் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் வருடத்தில் 4ஆம் 8ஆம் மாதங்களில், பாடரீதியான ஆசிரியர் வெற்றிடப்பட்டியல் புதுப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இந்த புதுப்பித்தலின் போது, புதிய ஆசிரியர் நியமனம், ஆசிரியர் ஓய்வு பெறல், பதவி மாற்றம், மாகாண ,டமாற்றம் போன்ற ஆசிரியர் சமனிலையைப் பாதிக்கும் விடயங்கள் கட்டாயம் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
இந்த பட்டியல் தயாரிப்புக்கள் மற்றும் புதுப்பிப்பித்தல் யாவும் கல்வி வலய ரீதியாக ,டம்பெறல் வேண்டும். மாகாணக் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த இடமாற்றங்கள் யாவும் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வழங்கப் படுதல் வேண்டும். ,டமாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை கல்வி வலயங்கள் உறுதிப் படுத்த வேண்டும்.
இந்த வெற்றிடப் பட்டியல் தயாரிப்பு, புதுப்பித்தல், மற்றும் இடமாற்றப்பட்டியல் தயாரிப்பு என்பவற்றின்போது தொழிற் சங்கப் பிரதிநிதிகளின் பங்கு பற்றுதலை கல்வி வலயங்களும், மாகாணக் கல்வித் திணைக்களமும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment