• Latest News

    October 28, 2014

    கந்தளாய் அல்-தாரிக் வித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

    கந்தளாய் அல்-தாரிக் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை மாணவர் பாவனைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (28) திறந்து வைத்தார்.

    கல்வி அமைச்சின் முழுமையான கண்காணிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் 40 கணனிகளைக் கொண்ட கணனிக்கூடம்-  20 கணினிகளுடன் கூடிய மொழிகள் கூடம்-  கணிதக்கூடம் - நெனச மத்தியநிலையம் -  உயர்தரத்திற்கான விஞ்ஞானகூடம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.


    ஆய்வுகூடம் திறந்து வைத்த பின்னர் பாடசாலையை பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு கற்கும் மாணவர்களின் கல்வி தொடர்பிலும் ஆராய்ந்தார். இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன- கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம-  முதலமைச்சர் அப்துல் நஷீட் மஜீட்- ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கந்தளாய் அல்-தாரிக் வித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top