• Latest News

    October 28, 2014

    யாழ். சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்கள்

    யாழ். சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் சற்று முன்னர் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக இந்திய பதில் துணைத்தூதுவர் எஸ்.டி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மிக விரைவில் மீனவர்களை விடுதலை செய்வதாக இந்திய உயர்ஸ்தானிகரம் உறுதியளித்ததைத் தொடர்ர்ந்து இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.
     
    இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்கள் நேற்று முதல் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

    இவர்களில் 4 மீனவர்கள் கடந்த 28.09.2014 அன்றும்இ 16 மீனவர்கள் 29.09.2014 அன்றும்இ 4 மீனவர்கள் 07.10.2014 அன்றும் இலங்கை கடற்ப்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் தங்கள் படகு பழதாகிய நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததால் தங்களை  விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்த போராட்டம் தொடர்பில் இந்திய பதில் துணைத்தூதுவர் எஸ்.டி. மூர்த்தி தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சிறைச்சாலைக்கு நேரில் சென்று அவர்களை பார்வையிட்டதுடன் அவர்களின் நிலைமை தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் டெல்லியில் உள்ள தலைமை காரியாலத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

    மேலும் இது தொடர்பில் இன்று சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கொழும்பு அரசுடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

    இன்று இவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்உண்ணாவிரதப்  போராட்டத்தை கைவிடுவார்கள் எனவும் இந்த வாரத்திற்குள் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிடார்.

    இருப்பினும் ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி நுழைவது சட்டப்படி தவறு எனவும்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் தொடர்பில் கொழும்பு அரசுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் பாடுகளை தடுத்து வைத்திருப்பதனால் தான் தற்போது எல்லைதாண்டி வருவது குறைந்துள்ளதாகவும். கொழும்பு அரசு தெரிவித்திருப்பதாக. -  அவர் மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ். சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top