ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உங்களாலும் விரட்ட முடியாது என்னாலும் விரட்ட முடியாது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தைப் பார்த்து உறுப்பினர் றிவ்ஹான் சவால் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் நடைபெற்று வருகின்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் முல்வைத்தீவில் தெற்கு மீனவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று உறுப்பினர் ரவிகரனின் கொண்டுவந்த பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றினார்.வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் நடைபெற்று வருகின்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன் போது குறிக்கிட்ட உறுப்பினர் றிவ்ஹான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உங்களாலும் விரட்ட முடியாது என்னாலும் விரட்ட முடியாது என உறுப்பினரைப் பார்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment