• Latest News

    October 28, 2014

    யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்

    யாழ். சிறைச்சாலையில் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

    யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 24 இந்திய மீனவர்களில் 7 பேரே தம்மை விடுதலை செய்யக் கோரி இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    கடந்த மாதம் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
    இந்த மீனவர்கள் 24 பேரையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது 24 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களில் 7 பேர் தம்மை விடுதலை செய்யக் கோரி யாழ்.சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

    உண்ணாவிரதம் இருக்கும் மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி சிறையில் சென்று பார்வையிட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top