38 அமைச்சர்களுக்கு எதிராக இரகசிய தகவல்
ஆவணங்களை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வைத்துள்ளது. ஆயினும், அது
விசாரணைகளை முன்னெடுப்பது இல்லையென, ம.வி.மு. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
அரசாங்கத்தை விமர்சிப்போருக்கு எதிராக
மட்டும் நடவடிக்கை என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது கடமையை குறுக்கிவிட்டது
என்றும் அவர் தெரிவித்தார். வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தை அங்கொன்று
இங்கொன்றுமாக தாக்க தொடங்கினார். இதனால் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, அவருக்கு
எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கான குற்றச்சாட்டுகளை திரட்ட தொடங்கி
நடவடிக்கையையும் எடுக்க தொடங்கியது.
பின்னர் அந்த அமைச்சர், அரசாங்கத்தின் மீது
குற்றம் காண்பதை நிறுத்தவிட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பெரிய
முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு பல முறைப்பாடுகள்
உள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியதும் ஒருவருக்கு எதிராக எவ்வளவு
வேகமாக விசாரணைகள் தொடங்குகின்றன என்பதை அவதானிக்கும் போது நகைப்புக்கிடமாக
உள்ளது என்று கூறினார்.
-தமிழ் மிரர்

0 comments:
Post a Comment