• Latest News

    November 15, 2014

    ஜனாதிபதி தரப்பினர் சோபித தேரரை அச்சுறுத்தவில்லை: அரசாங்க ஊடகம்

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சோபித தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்று லங்காபுவத்  தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டுக்கு அண்மையில் ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

    இதன்போது அங்கு அழைத்துவரப்பட்ட மாதுளுவாவே சோபித தேரரை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கடுமையாக அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் திடீர் சுகவீனமுற்று தற்போது மாலபே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

    எனினும் இந்தச் சம்பவத்தை அரசாங்கத்தின்  லங்காபுவத் செய்திச் சேவை மறுத்துள்ளது.

    அவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சோபித தேரரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக லங்காபுவத்  செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும் சோபித தேரர் மதக்கிரியைகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட அசதியினால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இரண்டொரு நாளில் அவர் குணமடைந்து இயல்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் லங்காபுவத் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தரப்பினர் சோபித தேரரை அச்சுறுத்தவில்லை: அரசாங்க ஊடகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top