• Latest News

    November 15, 2014

    தரம் ஐந்து புலமைப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் திங்கட்கிழமை

    தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கான புதிய வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    சிங்கள மொழிமூல மாணவர்களுக்கான ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி 163இலிருந்து 157ஆகவும், தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 159இலிருந்து 152ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் உதவித் தொகை பெறுவோரின் எண்ணிக்கை, 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் எனவும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவும் திட்ட முன்மொழிவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். (கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தரம் ஐந்து புலமைப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் திங்கட்கிழமை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top