• Latest News

    December 05, 2014

    அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி

    எஸ்.அப்துஸ் ஸலாம்                  எம்.ஐ.அமீர்
    எஸ்.அஷ்ரப்கான்: அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக அஷ்-ஷெய்க் எம்.ஐ.அமீர் நியமிக்கப்பட்டுள்ளமையானது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட (B-வி) பிரிவு பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் இன்று (05) தெரிவித்தார்.

    பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி அபயகோனினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்தை அம்பாரை கரையோர மாவட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் முஸ்லிம்களை சமாதானப்படுத்தவதற்கான உச்சக்கட்ட முயற்சியாகவே பார்க்க முடிகிறது. என்று குறிப்பிட்டுள்ள அப்துஸ் ஸலாம் மேலும் இது விடயமாக குறிப்பிடும்போது,

     தேர்தல் காலங்களில் கனியாத நிறைய காய்கள் திடீரென கனியும் ஆனால் அதனை நிரந்தர மாக சாப்பிட, அனுபவிக்க முடியாத நிலை காணப்படும். இந்நிலைதான் இன்று சிறுபான்மையாகிய முஸ்லிம் இனத்திற்கும் ஏற்படலாகிற்று. இதனை மக்களும் நன்கு உணர்வர். ஆட்சியாளர்கள் அதிகார தோரணையில் பேசுவதும், தேர்தல் வந்துவிட்டால் பொட்டிப்பாம்பாய் அடங்குவதும் இயல்பானதே. எதைக் கொடுத்தாவது தனது ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்றே இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

    எது எவ்வாறாக இருந்தாலும் ஆட்சிமாற்றத்திற்காக மக்கள் இன்று தயாராகிவிட்டார்கள். அதற்கான காத்திரமான நடவடிக்கைகளில் பிரதான ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள பொதுக் கூட்டு நிறைவேற்றி வருகிறது. அவர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் இன்றைய சூழலில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

    புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக அஷ்-ஷெய்க் எம்.ஐ.அமீர் தற்போது கடமையாற்றுகின்ற நிலையிலேயே இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ள எம்.ஐ.அமீருக்கு  எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top