• Latest News

    December 14, 2014

    கொழும்பில் பணியாற்றிய றோ புலனாய்வு தலைவர் திடீர் இடமாற்றம்

    இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள இந்திய புலனாய்வுப் பிரிவான றோ அமைப்பின் கொழும்பு பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்த கே. இளங்கோ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதுடெல்லியில் உள்ள தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    கொழும்பில் உள்ள றோ பணியகத்தின் தலைவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை.

    எவ்வாறாயினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள சூடான அரசியல் நிலைமையில் அவர் தனது சேவையை திருப்தியளிக்கும் வகையில் செய்யவில்லை என்ற காரணத்தினால் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    இலங்கையில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை பேணுவது, புலனாய்வு தகவல்களை பெறுவதற்கான நடவடிக்கைகள், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி அறிக்கைகளை வழங்குவது போன்ற பணிகள் கொழும்பில் பணியாற்றிய றோ பிரிவின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

    இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கொழும்பு விஜயத்தின் பின்னர் இந்த இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இது வழமையான இடமாற்றம் என இராஜதந்திர தரப்புகள் தெரிவிக்கின்றன.
    TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பில் பணியாற்றிய றோ புலனாய்வு தலைவர் திடீர் இடமாற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top