• Latest News

    January 30, 2015

    குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

    குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து விசாரணைகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களை பாதுகாக்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து கைதுகளும் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படும். தற்போது மூன்று முக்கியமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அலரி மாளிகையில் இடம்பெற்ற சூழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி செயலக வாகனங்கள் காணாமல் போனமை மற்றும் வெலோ சுதா போதைப்பொருள் வர்த்தகம் ஆகியன தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

    முறைப்பாடு செய்யப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று பொலிஸ்மா அதிபரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top