-எம்.வை.அமீர்-
அருகிவரும் கவிபாடும், கவிஇயற்றும் கலையை உயிருட்டும் வகையில் படர்க்கைகள் இணையம் கலை இலக்கிய ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “உன்னத நபிகள் வந்து உதித்தனர் உலகம் உய்ய” தலைப்பில் கவியரங்கு ஒன்று 2015-02-22 ல் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில்,சிரேஷ்ட பத்திரிகையாளர் கவிஞர் எம்.ஐ.பி.பௌஸுதீன் அவர்களது தலைமையில் கௌரவ கலாநிதி அல்ஹாஜ் இஸட்.ஏ.பஷீர் அவர்களது முன்னிலையில் இடம்பெற்றது.
இங்கு இளம் கவிக்குயில் முதல் முதிர் கவிஞர்கள் வரை கவிபாடி கவிதைக்கு உயிருட்டினர். இவர்களில் கவிதாயினி முபிதா அசனார், கவிஞர் இஸ்மாபரீட், கவிஞர் மருதமுனை விஜிலி மற்றும் கவிஞர் கலைமணி கலாபூஷணம் ஏ.சீ.இஸ்மாலெப்பை போன்றோரது கவிகள் சபையை அதிரவைத்தது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதிப் பதிவாளர் மன்சூர் ஏ. காதர் அவர்களும் நிகழ்வில் கலந்து, உரையாற்றினார். கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுள்ளாஹ் மற்றும் சட்டத்தரணி சியாத் உட்பட அபிமானிகளும் கலந்து கொண்டனர். தபால் அதிபர் எம்.எம்.ஜமால்தீன் அவர்களால் பெருமானார் (ஸல்) அவர்களின் முதல் துதுவர் முன்னனி வீரர் முஸ்அபிப்னு உமைர் (ரழி) எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.


0 comments:
Post a Comment