• Latest News

    February 22, 2015

    வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் வகையில் மூதூர் நவீன மயப்படுத்தப்படும்: ரவூப் ஹக்கீம்

    மூதூர் நகரம் விரைவில் நவீன மயப்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையிலும் அபிவிருத்தி செய்யப்படுமென நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
    ஞாயிற்றுக்கிழமை (22) மூதூருக்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம், போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் மக்களின் அமோகமான வரவேற்பிற்கு மத்தியில், வீதிகளினூடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீகின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூதூர் பஸ் டிப்போவில் எரிபொருள் நிரப்பு இயந்திரத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் மூதூர் நகரம் பல்வேறு வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவித்தார்.
    பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் வழிகாட்டுதலின் கீழ் மூதூர் மற்றும் கிண்ணியா நகரங்களும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய கிராமங்களும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.
    இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்கூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், மூதூர் பிரதேச சபைத் தலைவர் ஏ.எம். ஹரீஸ், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம். முபீன், மாகாண சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜே.எம்.உசைன்தீன், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸ், கிழக்கு மாகாண போக்குவரத்து பொறியிலாளர் ஏ.எம்.றூமி, மூதூர் பஸ் டிப்போ முகாமையாளர் நௌபீர், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பீ.கே.கலீல் ஆகியோர் மற்றும் பஸ் டிப்போ ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் வகையில் மூதூர் நவீன மயப்படுத்தப்படும்: ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top