ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவியஅரசியல் வாதிகள் தங்களது தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல்,'ஐயோ, ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தோற்றுப் போகவில்லை. முழு சிங்கள இனமும் தோற்றுப்போய் விட்டது!' என்று கோஷிக்கின்றார்கள். சிறுபான்மை இனங்கள் வென்றுவிட்டன. பெரும்பான்மைச் சிங்கள இனம் தோற்றுவிட்டது என்பதுதான் அதன் பொருள் எனக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த செய்தியை விடுப்பதனூடாக ஒற்றுமைப்பட்டுள்ள முழு நாட்டுமக்களையும் மீண்டும் இனவாதத்தை நோக்கிபின்தள்ளுவதற்கு எத்தனிக்கப்படுகின்றதுஎன்றார்.
நகரஅபிவிருத்தி,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ஹக்கீம் யட்டிநுவரைதேர்தல் தொகுதியில் தொளுவமேற்குக் கிராமத்தில் புதிய சனசமூக நிலையத்தின் இரண்டுமாடிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறினார்.
யட்டிநுவரபிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பாகொடித்துவக்குவின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சனசமூக நிலையக் கட்டிடத்தை சர்வதேசமகளிர் தினமானமார்ச் மாதம் 08ஆம் திகதி அமைச்சர் ஹக்கீம் கோலாகலமாகதிறந்துவைத்தார்.
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
புதிய யுகமொன்றில் நாம் காலடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்தமைத்திரியுகம் பற்றி மக்கள் மத்தியிலுள்ள எதிர்பார்ப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதைநாம் நன்றாகமனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.
அதேவேளையில்,எங்களுக்கும்,புதியஅரசாங்கத்திற்கும் எதிரான விமர்சனங்களுக்கும் குறைவில்லை. ஆயினும், நூறு நாட்களுக்குள் பலவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தும் கூட, அவற்றில் சாதித்தவற்றைப் பொறுத்தவரை குறைபாடுகள் இருக்கலாம்.
எனக்கு இப்பொழுதுமிகவும் பலம் வாய்ந்தஓர் அமைச்சுப் பொறுப்புகிடைத்துள்ளது. முன்னர் பிரபலஅமைச்சர் ஒருவரும்,முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் கையாண்டமுக்கியமான அமைச்சுப் பொறுப்பை நான் ஏற்றிருக்கின்றேன். அந்த அமைச்சினூடாக வழங்கக்கூடிய அனைத்து சேவைகளையும் மக்களுக்குச் செய்வதற்குநான் தயாராகயிருக்கிறேன்.
கண்டி மாவட்டத்தில் இந்தயட்டிநுவரதொகுதியில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினைஉட்பட ஏனைய குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்குநான் தீர்மானித்திருக்கிறேன்.
இந்தயட்டிநுவரதொகுதியில் பெரும்பாலும் சிங்கள மக்களே வசிக்கின்ற போதிலும், முஸ்லிம்,தமிழ் மக்களுடனும் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். முன்னர் இது கடுகண்ணாவை தொகுதியாக இருந்தகாலத்தில் எனது ஊரான கலகெதரயில் அதன்கீழ் இருந்தது. அப்பொழுது சிங்களமரிக்கார் என்று அழைக்கப்பட்ட ஸீ.ஏ.எஸ்.மரிக்கார் என்ற அமைச்சர் சிங்களமக்களினதும் பேராதரவைபெற்றிருந்தார். அவரது நடை,உடை,பாவனை கூட சிங்கள பாரம்பரியத்திற்கு ஏற்புடையதாகவே காணப்பட்டது. அவரைபெரும்பான்மை சிங்களமக்கள் சிறுபான்மையினரதம் ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குஅனுப்பியிருந்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைந்திருந்தால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இங்குஉரையாற்றிய மத்தியமாகாண சபை உறுப்பினர் மயந்ததிசாநாயக்க கூறினார். நாங்கள் எல்லோரும் பழிவாங்கப்பட்டிருப்போம்.
இப்பொழுதுகடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அரசியல் வாதிகள் தங்களது தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல் எவற்றையெல்லாமோ உளறுகிறார்கள் அவர்கள் புதிய ஒருகோஷத்தை எழுப்பத் தொடங்கிருக்கிறார்கள்.
அவர்களது எழுப்பியள்ளகோஷத்தின் பாரதூரத்தைப் பற்றியோ சிக்கவேண்டியுள்ளது. 'ஐயோ, ஜனாதிபதிஅவர்களே,நீங்கள் தோற்றுப் போகவில்லை. முழு சிங்கள இனமும் தோற்றுப்போய் விட்டது!'என்றுகோஷிக்கின்றார்கள். அதிலிருந்துஎன்னவெளிப்படுகிறது? அதன் விளக்கமென்ன? சிறுபான்மை இனங்கள் வென்றுவிட்டன. பெரும்பான்மைசிங்கள இனம் தோற்றுவிட்டதுஎன்பதுதான் அதன் பொருள்.
இந்த இனவாதச் செய்தியை விடுப்பதனூடாகஒற்றுமைப்பட்டுள்ள முழு நாட்டுமக்களையும் மீண்டும் பின் நோக்கித் தள்ளுவதற்கு எத்தனிக்கப்படுகின்றது.
இதனை மனதில் இருத்தி, இந்தஅரசாங்கம் ஓர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல. இந்தநாட்டில் வாழும் அனைத்து இனங்களை அரவணைத்துஆட்சிசெய்யவல்லதுஎன்பதைசெயலில் காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.
முன்னைய அரசாங்கத்தை விடஅர்ப்பணிப்புடன் செயலாற்றும் அரசாங்கமாகும் என்பதை விஷேடமாக சிறுபான்மைமக்களின் தலைவர் என்றமுறையில் நிரூபிப்பதுஎங்களதுகடமையாகும் என்றார்.
இந்தநிகழ்வில் மத்தியமாகாண சபை உறுப்பினரும்,யட்டிநுவரதொகுதிஐக்கியதேசியக் கட்சி அமைப்பாளருமான மயந்ததிசாநாயக்க,யட்டிநுவரபிரதேச சபை உறுப்பினர் புஷ்பாகொடித்துவக்கு, தும்பனைபிரதேச சபை உறுப்பினர் அம்ஜாத் முத்தலிப்,பன்விலபிரதேச சபை உறுப்பினர் இத்ரீஸ், பாத்ததும்பர பிரதேச சபை உறுப்பினர் ரியாஜ்,யட்டிநுவரபிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் நிலந்த சம்பிக்கஅமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்




0 comments:
Post a Comment