• Latest News

    March 10, 2015

    “தேர்தல் முறைமாற்றமுறை சிறுபான்மைகளுக்கு ஆபத்து”

    (எஸ்.அஷ்ரப்கான்)
    அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீதின் ஏற்பட்டில் “தேர்தல் முறைமாற்றமுறை சிறுபான்மைகளுக்கு ஆபத்து” என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு  கல்முனையில் அமைந்துள்ள அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
    இதன்போது கருத்து வெளியிட்ட வை.எல்.எஸ். ஹமீட் ஒன்றில் இத்தேர்தல் முறை மாற்றுவதாயின் 50 இற்கு 50 என்ற அடிப்படையில் சிறுபான்மைகளை பாதிக்ககாத வகையில் அம்மாற்றம் இடம்பெற வேண்டும். அத்துடன் இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற ஜனநாயக ஆட்சி மாற்றத்தினுடாக சிறுபான்மைகளும் சிறப்பாக வாழக்கூடிய ஒரு சிறந்த நிலை உருவாக்கப்பட வேண்டும். இரு பிரதான கட்சிகளும் நினைத்து தனியே தேர்முறை மாற்றத்தினை கொண்டுவராது சிறுபான்மை இனங்களுடனும் கலந்தாலோசித்து சிறந்த தீர்வு ஒன்றை பெற்று அதனுாடாக கொண்டுவரப்படும் மாற்றத்தினையே எமது கட்சி எதிர்பார்க்கின்றது. இதற்காக சிறுபன்மைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு குழுவாக செயற்படுவதற்கான அழைப்பை இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வீடுப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் மேலும் தெரிவித்தார்.
    இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கல்முனைத்  தொகுதி அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சீ.எம். முபீத், கட்சியின் கல்முனைத்தொகுதி இளைஞர்காங்கிரஸ் அமைப்பபாளர் சீ.எம். ஹலீம், அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.ஏ. லத்தீப், கட்சியின் மருதமுனை, நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளர் சித்தீக் நதீர் உட்பட பிரதேச ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “தேர்தல் முறைமாற்றமுறை சிறுபான்மைகளுக்கு ஆபத்து” Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top