எஸ்.எம்.எம்.றம்ஸான்:
ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்பானது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அனுசரணையுடன், இலங்கையின் மூன்றாவது இளைஞர் வலுவூட்டல் கல்முனைப் பிராந்தியத்திற்கான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (10) சாய்ந்தமருது பிரதான வீதியில் (பொது நூலகம் முன்பாக) திறந்துவைத்துள்ளது.
நிலையப் பிரதி முகாமையாளர் ஏ.எம்.எம்.சினான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரம்ஸி செய்நுடீன், அதன் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் டோனி செனவிரத்ன உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






0 comments:
Post a Comment