பொதுத்
தேர்தல் முடிவடைந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச நேற்று
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ச 11 முறை ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை, ஊழல், மோசடி தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணையை தடுத்து நிறுத்த உதவுமாறு கேட்டுள்ளார்.
ஜனாதிபதி தலையிட்டு இந்த விசாரணைகளை நிறுத்தினால், தான் நாடாளுமன்றத்தில் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து அமைதியாக இருக்க தயாராக இருப்பதாகவும் மகிந்த கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவிற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, அதற்கான சந்தர்ப்பம் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் இது குறித்து சிந்தித்து பார்த்திருக்கலாம் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment