• Latest News

    August 11, 2015

    கல்முனை மாநகர சபையின் பொம்மை நிர்வாகம்?

    எஸ்.றிபான்-
    கல்முனை மாநகர சபையினால் கடந்த 09.08.2015 ஞாயற்றுக் கிழமை கல்முனை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள சிறியதொரு வீதிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கல்வெட்டும் நிர்மாணிக்கப்பட்டது. இப்பாதையின் கல்வெட்டினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அன்று (09.08.2015) காலை திரை நீக்கம் செய்து வைத்தார்.

    இதனையொரு முஸ்லிம் ஆக்கிரமிப்பாக கருதிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஹென்றி மகேந்திரன் தலைமையிலான குழுவினர் பட்டப்பகலில் சட்டத்தை கையில் எடுத்துச் கந்தசாமி விக்ரம் போன்று செயற்பட்டுள்ளார். பாரிய சுத்தியலைக் கொண்டு பகிரங்கமாக உடைத்து எறிந்துள்ளார். இந்த அராஜகத்தை கேட்பதற்கு அல்லது தடுத்து நிறுத்துவதற்கு கல்முனை மாநகர  சபையின் மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தவறியுள்ளமை அவரின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பிட்ட வீதிக்கான பெயர் உரிய அனுமதியுடன்தான் சூட்டப்பட்டதா? அவ்வாறு அனுமதியுடன் சூட்டப்பட்டிருந்தால், அதனை ஹென்றி மகேந்திரன் சட்டத்தை கையில் எடுத்து உடைத்த போது ஏன் அச்செயலை பொலிஸாரினைக் கொண்டு தடுக்கவில்லை. தடுக்க முடியாத நிலையில்தான் கல்முனை மாநகர சபையின் நிர்வாகம் உள்ளதா? 

    இதே வேளை,  குறிப்பிட்ட வீதிக்கான பெயரை சூட்டும் நடவடிக்கை சட்டத்திற்கு முரணாக, மேயரின் விருப்பத்திற்கு  அமைய மேற்கொள்ளப்பட்டதா? சட்டப்படி வீதிக்கு பெயர் சூட்டப்படவில்லை என்று வைத்துக் கொண்டால், அதனை சாதாரணமாக, இது சட்டப்படி  அங்கிகாரம் பெற்றுக் கொள்ளவில்லை என்று ஹென்றி மகேந்திரன் போன்று உடைப்பதற்கு சட்டத்தில் அனுமதியுண்டா என்று சிரேஸ்ட சட்டத்தரணியாகிய கல்முனை மேயர் தெளிவுபடுத்துவாரா?

    கல்முனை மேயர் இவை எதற்கும் பதில் சொல்லாத நிலையில் மௌனமாக இருப்பது ஹென்றி மகேந்திரன் தமது வங்ரோத்து அரசியலை இனவாதம் பேசி உயர்த்திக் கொள்வதற்காக கல்முனை நகரம் தமிழர்களுக்குரியதென்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாக இருக்கின்றதா?

    கல்முனை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுமார் 99 வீதமானவை முஸ்லிம்களுக்குரியவை. மிக நீண்ட காலமாக இந்த நகரை முஸ்லிம்கள்தான் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பின்னணியில் கல்முனை நகரம் தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டுமென்று  இனவாதம் பேசிக் கொள்ளும் ஹென்றி மகேந்திரனின் வெளிச்சம் போட்ட இனவாத செயற்பாட்டை கண்டிப்பதற்கு கூட கல்முனை மேயர் தவறி இருப்பது அவர் மாநகர சபையில் ஒரு பொம்மையாக இருக்கின்றாரா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

    மேலும், எம்.எஸ்.காரியப்பர் கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரின் மருமக்கள் கூட பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். இவ்வாறு மிகவும் புகழ்வாய்ந்த ஒரு மனிதருக்கு மேயர் நிஸாம் காரியப்பர் சிறியதொரு வீதிக்கு அவரின் பெயரை சூட்டி அவமதித்துள்ளார் என்றே எண்ண வேண்டியுள்ளது. இது போதாதென்று ஹென்றி மகேந்திரன் கல்முனை முஸ்லிம்களின் மனதை மாத்திரமன்றி, இலங்கை முஸ்லிம்களையும், எம்.எஸ்.காரியப்பரையும் மேலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் எனது தமிழ் - முஸ்லிம் உறவை பேண வேண்டுமென்று நினைக்கும் உள்ளங்களுக்கு வேதனையாகவே இருக்கின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையின் பொம்மை நிர்வாகம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top