றிஸான்:
பொத்துவில் பிரதேசத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பை தேசிய காங்கிரஸ் கட்சித் தவைர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை வாக்காளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புப் பட்டியலில் போட்டியிடும் 3ம் இலக்க தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.பதுர்கான் தெரிவித்தார்.
வேட்பாளர் ஏ.பதுர்கான் தனது வெற்றி வியூகம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி அப்துல் காதர், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சி.றகுமத்துல்லாஹ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

பொத்துவில் பிரதேச வாக்காளர்களில் இன்று பாரிய மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சிடைகின்றேன். பொத்துவில் மக்கள் சிந்தனை மாற்றம் பெற்றுள்ளனர். நல்லது எது? தீயது எது? என்று பிரித்தறிகின்றனர். தங்களது ஊருக்கு பாராளுமன்றப் பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டம் என விரும்புகின்றனர்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் மக்கள் இணைந்து பொத்துவில் பிரதேசத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்றுக் கொளவதற்கான வியூகத்தை தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் வகுத்துள்ளார். அவரது தேர்தல் வியூகம் கடந்த காலங்களில் பிழைத்தாகவும் வரலாறில்லை. இதனை வாக்காளர்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.
பொத்துவில் போன்ற ஊர்களுக்கு தன்னந்தனியாக பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான ஊர்கள் ஏனைய பிரதேசங்களின் உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான சந்தர்ப்பமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேச மக்கள் தங்களது வாக்குப் பலத்தினால் பிரதேசத்தில் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனரா அல்லது வழமை போன்று பிரதிநிதித்துவத்தை தாரை வார்க்கப் போகின்றனரா என்பது குறித்தும் சித்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் பொத்துவில் பிரதேசத்தில் பில்லியன் கணக்கில் அபிவிருத்திப் பணிகளைச் செய்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா என்பதையும் மக்கள் அறிந்திருப்பர். எதிர்காலத்திலும் இப்பிரதேசம் அபிவிருத்தி காணவேண்டிய தேவையுள்ளது. இவைகள் குறித்தும் வாக்காளர்களின் கவனம் திரும்ப வேண்டும்.

0 comments:
Post a Comment