ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரை மாற்றி,
அதிகாரத்தை தன்வசப்படுத்தியுள்ள நிலையில், தேசியப்பட்டியல் ஊடாக
நாடாளுமன்றத்திற்கு வர எதிர்ப்பார்த்த மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் நிலைமை
கேள்விக்குரியாகியுள்ளது.
ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பியசிறி
விஜேநாயக்க, டிரான் அலஸ் போன்றோர் இந்த சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக
அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரது பரிந்துரையின்படியே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தேர்தலில் மைத்திரி ஆதரவாளர்களை தோற்கடித்து நீக்கி விட மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் முயற்சித்தனர். இந்த நிலையில் தற்போது மகிந்த ஆதரவாளர்களை மைத்திரி தரப்பு நீக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
மைத்திரிக்கு ஆதரவான வேட்பாளர்கள் எவரையாவது தோற்கடிக்க மகிந்த ராஜபக்ச தரப்பு சதி செய்தால், தோற்கும் அந்த வேட்பாளரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்க முடியும்.
விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரபூர்வ கூட்டணிக் கட்சிகள் இல்லை என்பதால், அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது அவர்களை ஒதுக்கி தள்ளி விடலாம். வாசுதேவ நாணயக்காரவின் நிலைமையும் இதே போன்றதே எனவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment