(சுலைமான் றாபி)
முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அதன் செயலாளர் எம்.ஏ.எம். ரசீனினால் விஷேட ஊடக அறிக்கையொன்றினை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த விஷேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
கட்சியின் போராளியாகவும், பயங்கரவாத சூழ்நிலைகளின் போது உயிராபத்தை எதிர்கொண்டவருமான அன்னாரை ஊர், பிரதேசம் என்பவற்றிக்கு அப்பால் கட்சியின் முதுசம் எனும் தத்துவத்தின் அடிப்படையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் சிந்தனையில் உதித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அம்பாறை மாவட்டத்தில் வென்றெடுத்த பெருமை கட்சியின் செயலாளர் ஹசன் அலியையே சாரும்.
எனவே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் வழங்குவது தற்போதைய நிலையில் மிகவும் பொருத்தமானதாக அமையும் என நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கருதுவதாக அந்த விஷேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

god willing he will get , we will pray for him , good job but this is not a right time , one thing bate time for secretes...?
ReplyDelete