• Latest News

    November 16, 2015

    கற்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் : பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

    அபு அலா -
    இறக்காமம் சர்வோதய அமைப்பின் அனுசரனையில் கற்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை இரவு (16) இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

    இறக்காமம் பிரதேசத்தில் வாழும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 வரிய குடும்பங்களின் கற்பிணித் தாய்மார்களுகே இந்த நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
     
    இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு கற்பிணித் தாய்மார்களுக்கான நுளம்பு வலைகளை வழங்கி வைத்தார்.
     





    மேலும், சர்வோதய அமைப்பின் உதவிப் பணிப்பாளர் அஸ்வித அனுரத்த, கிழக்கு மாகாண சகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர், சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம்.றசீன், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு கற்பிணித் தாய்மார்களுக்கான நுளம்பு வலைகளை வழங்கி வைத்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கற்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் : பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top