• Latest News

    November 20, 2015

    இலங்கையில் வாகன நெரிசல் நிலையை கூகுல் வரைபடம் மூலம் பார்க்க கூடிய வசதி

    இலங்கையில் கொழும்பின் பிரதான வீதிகளில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் நிலையை கூகுல் வரைபடம் மூலம் இனி பார்க்க கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. 
     இந்த வசதி இதுவரை 50 நாடுகளில் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வாகன நெரிசல் நிலையை கூகுல் இணையத்தளத்தில் கூகுல் வரைபட விண்ணப்பக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் பார்க்கமுடியும்.

    கையடக்கதொலைபேசி பாவனையாளர்களுக்கு இது உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    நிறங்களை கொண்டே வீதிகளின் வாகன நெரிசல் நிலையை அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    குறிப்பாக பச்சை நிறம் சாதாரண வேக வாகனவேகத்தை காட்டும். மஞ்சள் நிறம் குறைந்த வேக நிலையைக்காட்டும் சிவப்பு ஆகவும் குறைந்த வாகன ஓட்டத்தை காட்டும். சாம்பல் நிறம் பதிவுகளை வெளிக்காட்டாது.

    கூகுல் வரைபடம் மூலம் வீதி விபத்துக்களையும், வீதிமூடல்கள், வீதியமைப்புக்கள் போன்றவற்றையும் அறிந்துக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் வாகன நெரிசல் நிலையை கூகுல் வரைபடம் மூலம் பார்க்க கூடிய வசதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top