இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கமைய குறித்த தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சல்மான் அலி ஆகா தலைமையிலான குறித்த குழாமில் அப்துல் சமத், அப்ரார் அஹமட், ஃபஹீம் அஷ்ரப்,ஃபகார் சமான், க்வாஜா நபாய், மொஹமட் நவாஸ், மொஹமட் சல்மான் மிர்சா, மொஹமட் வசீம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்ஸதா ஃபர்ஹான்,சைம் அயூப், ஷதாப் கான், உஸ்மான் கான் மற்றும் உஸ்மான் தாரிக் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் (BBL) தொடரில் விளையாடுவதால், பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகிய முன்னணி வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த 3 டி20 போட்டிகளும் தம்புள்ளையில் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டி20 போட்டி எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment