சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மிதக்கிறது. இந்த தொடர் மழையினால் ஏராளமான வீட்டிற்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் வீடுகளில் சமையல் கூட செய்ய முடியாமல் உணவிற்காக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் மற்றும் அடிப்படை வசதி கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
மக்களின் நிலையை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (17-11-2015) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான், தென் சென்னை மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் செயல்வீரர்கள் அடங்கிய குழு சென்னை வேளச்சேரி பெருங்குடியில் உள்ள குடிசை பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி நிவாரப்பணிகளை மேற்கொண்டனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சென்னையில் எழும்பூர், புளியந்தோப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்கள் வழங்கி நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



0 comments:
Post a Comment