• Latest News

    November 17, 2015

    பொத்துவிலை எனது ஊர் போன்று பார்ப்பேன்: கிழக்கு சுகாதார அமைச்சர்

    அபு அலா –
    பொத்துவில் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் கேட்டறிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்  ஏ.எல்.முஹம்மட் நஸீர் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

    அமைச்சரின் மேற்படி விஜையத்தின்போது, வைத்தியசலை அத்தியேட்சகர், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரைச் சந்தித்து வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட இதேவேளை கடந்த 9 ஆம் திகதி வைத்தியர்களையும், மருத்துவ தாதி உத்தியோகத்தர்களையும் கடமையை செய்யவிடாது பங்கம் ஏற்படுத்தியதால் வைத்தியர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்தனர் என்று இடம்பெற்ற அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.

     இதனை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் உரையாற்றுகையில்,

    கிழக்கு மாகாணத்தில் மிகத் தூரமான இடத்தில் இருக்கும் இந்த பொத்துவில் ஊரை, நான் எனது சொந்த ஊரைப்போன்று பார்பேன். இந்த ஊருக்குத் தேவையான சகல வசதிகளையும் எனது அமைச்சின் மூலமும் மத்திய அரசின் மூலமாக பெற்றுக்கொடுக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன்.

    அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர், பொத்துவில் வைத்திய சாலையின் உபகரனங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு மத்திய அரசு  இரண்டு கோடி ரூபாய்களை வழங்கியுள்ளது. அதற்கான வேலைகள் அடுத்த மாதமளவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    அத்துடன் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையை ஒரு சுமுகமான தீர்வினை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி ஒரு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றேன் என்றார்.

    குறிப்பிட்ட விஜையத்தின் போது அமைச்சருடன் கல்முனை பிராந்திய  பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவிலை எனது ஊர் போன்று பார்ப்பேன்: கிழக்கு சுகாதார அமைச்சர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top