நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
முறைமையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறை மாற்றம் ஆகியன தொடர்பில்
ஜனாதிபதி சமர்ப்பித்த பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த இந்த அனுமதி கிட்டியுள்ளது.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தலைமையில் இந்த விடயம் தொடர்பில் குழுவொன்றும் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது யோசனை முன்வைத்துள்ளதாக
தெரியவந்துள்ளது.

0 comments:
Post a Comment