• Latest News

    November 17, 2015

    அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் நீரிழிவு தினம் அனுஸ்டிப்பு...!

    (சப்னி)
    டந்த உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றாநோய் பிரிவு ஏற்பாடு செய்த உலக நீரிழிவு தினமானது மக்களுக்கு நீரிழிவு தொடர்பான விழிப்புணவு ஏற்படுத்தல் என்ற தொனிப் பொருளில் இன்று (17) அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . நக்பர் தலமையில் நடைபெற்றது.

    இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஜவுபர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சுமார் 100 மேற்பட்ட நோயாளர்களுக்கு நீரிழிவு சம்மந்தமான இரத்தபரிசோதனை நடை பெற்றதுடன் உயர் குருதி அமுக்கம் மற்றும் கொழுப்பு சம்மந்தமான நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது இந்திகழ்வில் பிரதம அதிதியான டாக்டர். 

    ஜவுபர் அவர்களுக்கு உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . நக்பர் அவர்களால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது 

    இயற்கை உணவு மூலம் வாழ்க்கையை அனுபவிக்கலாம் மற்றும் நீரிழிவு நோயில் இருந்து விடுபடல் போன்ற ( Healthy Life with A yurveda) என்ற செயற் திட்டமும் அமுல் படுத்தப்பட்டது .

    மேலும் தொற்றா நோய் பிரிவு பொறுப்பாளர் (Dr.Nafeda) மற்றும் வெளி நோயாளர் பிரிவு பொறுப்பாளர் (Dr.Rajess) மற்றும் விடுதி பிரிவு பொறுப்பாளர் (Dr.farwin) மற்றும் வைத்திய சாலை உத்தியோகஸ்தர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் (M.C kalel) மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் (R.vadivel) அவர்களும் கலந்து கொண்டனர் 



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் நீரிழிவு தினம் அனுஸ்டிப்பு...! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top