எஸ்.அஷ்ரப்கான்-
மல்வானை உளஹிட்டிவள அல்-மஹ்மூத் வித்தியாலயத்தின் க.பொ.த. (சா.த) தின விழா நேற்று (02) முன்தினம் புதன் கிழமை பாடசாலையில் ஆசிரியர் வை.எம். நிஸாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான், கௌரவ அதிதி பிரதி அதிபர் எம்.ரீ.எப். றுவைஸா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சாதாரண தர மாணவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் இந்நிகழ்வினை பாடசாலையின் 10 ஆம் தர மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததுடன், கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.
இதன்போது சாதாரண தர மாணவர்களுக்கான நினைவுச் சின்னம் ஆசிரியர்களான வை.எம். நிஸாம், எஸ்.நித்தியராஜ், இசுறு விஜயவர்த்தன, எஸ்.அஷ்ரப்கான், எம். ஹாதி மற்றும் அதிபர், ஆசிரியர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த பாடசாலை இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையில் களனி வலயத்திலுள்ள 115 சிங்கள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையில் முதலாம் இடத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடசாலை சார்பாக 49 பிள்ளைகள் பரீட்சைக்குத் தோற்றி 16 பிள்ளைகள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று தெரிவு செய்யப்பட்டதுடன், 100 புள்ளிகளுக்கு மேல் 45 மாணவர்களும் பெற்று பாடசாலை வரலாற்றில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
அதேபோன்று முதல் தடவையாக சாதாரண தரத்திற்கும் இப்பாடசாலை சார்பாக 30 மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment