• Latest News

    December 04, 2015

    ஒலுவில் துறைமுக காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான விசாரணை.

    (எஸ்.அஷ்ரப்கான்)
    ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக 2008ம் ஆண்டு 48 பேர்களின் 49.5 ஏக்கர் காணி சட்டப்படி சுவீகரிக்கப்பட்டு 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால நஷ்டஈடு வழங்குவதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட நஷ்ட்ட ஈட்டுத் தொகை வழங்கப்படாமல் கடந்தகால மஹிந்தவின் அரசில் மறுக்கப்பட்டது.

    இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களால் நஷ்ட்டஈடு வழங்கலில் அநீதி இழைக்கபட்டமை அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றமை தொடர்பாக பிரதமருக்கு 2014ம் ஆண்டு மஹஜரொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.அதன் பிரகாரம் 2015.01.29ம் திகதி ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற விசாரணையின் போது விசாரணைக் குழுவினரால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் பழி வாங்கல்களுக்கும் அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் எதிர்காலத்தில் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் அரசியல் பழிவாங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மீண்டும் 2015.11.18ம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே அவர்களின் 2015.11.06ம் திகதியின் இல:ADS/PA/153/PR Committee கடிதத்தின் பிரகாரம் அவ் அமைச்சில் விசாரணை நடைபெற்றதாகவும் அதன்போது விசாரணைக் குழுவினரால் உரிய விபரங்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தேவையேற்படும் பட்சத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதுடன் கபினட் அனுமதியை பெறுவதற்காக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என விசாரணைக் குழுவினரால் தெரிவித்ததாகவும் ஒலுவில் துறைமுக காணி இழந்தோர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.அன்சார் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒலுவில் துறைமுக காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான விசாரணை. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top