• Latest News

    August 18, 2016

    வடக்கு முஸ்லிம்கள் பற்றி அரசாங்கத்துடன் பேசுவேன்

    யாழ். முஸ்லிம்களிடம் அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு
    வட மாகாண முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவற்­றுக்­கான தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்க முயற்­சிப்பேன் என இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் தெரி­வித்­துள்ளார்.

    வடக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் நேற்றுக் காலை யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற விசேட சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

    இச்­சந்­திப்பில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் அ.அஸ்மின், வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்­பாக, ஆரிப், எம்.றஹீம், மஹ்ரூப்,  ஜன்­சிலா மஜீத் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

    இச் சந்­திப்பில் கலந்து கொண்ட வடக்கு முஸ்லிம்சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் அமெ­ரிக்க தூது­வ­ரிடம் கருத்து வெளி­யி­டு­கையில்,
     1990 களில் விடு­தலைப் புலி­க­ளினால் பல­வந்­த­மாக இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட வடக்கு முஸ்­லிம்­களின் வாழ்வு கடந்த 25 ஆண்­டு­க­ளாக சொல்­ல­மு­டி­யாத தனி­ம­னித, சமூக, கலா­சார, கல்வி, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யான பின்­ன­டை­வு­களை அந்த மக்­க­ளி­டத்­திலே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்­பதை பலரும் கண்­டு­கொள்­வ­தில்லை.

    இதன் கார­ண­மாக அந்த மக்­களின் யதார்த்­த­மான பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து உரிய கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. இது இந்த நாட்­டிலே ஏற்­ப­டப்­போகும் அர­சியல் ரீதி­யான மாற்­றத்தில் பங்­கேற்­காத ஒதுக்­கப்­பட்ட ஒரு சமூகக் குழு­வாக அவர்­களை மாற்­றக்­கூ­டிய அபா­யத்தை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது.

    1990 களிலே வெளி­யேற்­றப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் 25,000 குடும்­பங்­களைச் சேர்ந்த 100,000 மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள் என்று உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற குறிப்­பொன்று தெரி­விக்­கின்­றது.

    ஆனால் இப்­போது வடக்கைச் சேர்ந்த 70,000 க்கும் அதி­க­மான முஸ்லிம் குடும்­பங்கள் இலங்கை முழு­வதும் மற்றும் வெளி­நா­டு­க­ளிலும் பரவி வாழ்­கின்­றார்கள். இவர்­களை வடக்கின் மாவட்ட செய­ல­கங்­களில் பதிவு செய்­வ­தற்­கான முன்­மொ­ழி­வுகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் அவை இது­வரை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

    மாறாக மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக வரு­கின்­ற­வர்­களை மாத்­தி­ரமே பதிவு செய்­வ­தற்­கான நடை­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன. இது எமது அடிப்­படை உரி­மை­யினை மறுக்­கின்ற செயற்­பா­டா­கவே இருக்­கின்­றது.

    மீள்­கு­டி­யே­று­கின்ற முஸ்லிம் மக்­க­ளுக்­கான காணி, வீட­மைப்பு, வாழ்­வா­தாரம், கல்வி, சுகா­தாரம், உட்­கட்­ட­மைப்பு தேவை­களை நிவர்த்தி செய்­து­கொள்­வதில் மத்­திய அர­சாங்­கமும், வடக்கு மாகாண அர­சாங்­கமும் இது­வரை கொள்கை ரீதி­யான எவ்­வித நிலைப்­பா­டு­க­ளையோ அல்­லது விஷேட செயற்­திட்­டங்­களை முன்­மொ­ழி­யவோ அல்­லது முன்­னெ­டுக்­கவோ இல்லை என்­ப­தையும் இவ்­வி­டத்தில் குறிப்­பிட்டுச் சொல்­ல­வேண்டும்.

    மாற்­ற­மாக அரச அதி­கா­ரி­களும், அர­சியல் தலை­வர்கள், தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு சில சிவில் அமைப்­பு­களும், தமிழ் ஊட­கங்­களும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வதும், இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­து­வதும், போலி­யான இன முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் வித­மான பிரச்­சா­ரங்­களை மேற்­கொள்­வதும் வடக்கில் சர்­வ­சா­த­ரண விட­ய­மாகப் போய்­விட்­டது.

     * முல்­லைத்­தீ­விலே 1980களில் அர­சாங்­கத்­தினால் முஸ்லிம் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட காணி­களை மீண்டும் அவர்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டாது என ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மாகாண சபை உறுப்­பி­னர்கள் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­வதால், குறித்த காணி­களை முஸ்லிம் மக்­க­ளுக்கு மீண்டும் வழங்க முடி­யாது என கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செயலர் தெரி­வித்­துள்ளார்.

    * யாழ்ப்­பாணம் சாபி­நகர், பொம்மை வெளி போன்ற பிர­தே­சங்­க­ளிலே முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­க­ளிலே குடி­யே­றி­யுள்ள தமிழ் மக்கள் அவ்­வி­டத்தை விட்டும் வெளி­யேற முடி­யாது என்று தெரி­வித்து வரு­கின்­றார்கள்.

    * மன்னார், முல்­லைத்­தீவு, யாழ்ப்­பாணம் போன்ற மாவட்­டங்­க­ளிலே முஸ்­லிம்­களை வாக்­கா­ளர்­க­ளாகப் பதிவு செய்­வ­தற்கு பல்­வேறு நிபந்­த­னைகள் விதிக்­கப்­ப­டு­கின்­றன.

    * யாழ்ப்­பாணம் பறச்­சே­ரி­வெ­ளி­யிலே 60 ஆண்­டு­க­ளாக செய்கை பண்­ணாமல் இருந்த வயல் நிலங்­களை நிரப்பி வீடு­களை அமைத்­தார்கள் என்று குற்றம் சுமத்­தப்­பட்டு ஒரு சில குடும்­பங்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றிலே வழக்­குத்­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

    *  அரச தொழில்­களை வழங்­கு­வ­திலே 2013 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் கணி­ச­மான புறக்­க­ணிப்­பு­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள். இவை ஒரு சில உதா­ர­ணங்கள் மாத்­தி­ரமே.

    இவ்­வா­றான நிலையில் மனித உரி­மைகள் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும், நிலை­மா­று­கால நீதி குறித்தும், நல்­லி­ணக்­கப்­பொ­றி­மு­றை­களை ஏற்­ப­டுத்­து­வது குறித்தும், அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­துதல் குறித்தும் நாம் இந்த மக்­களின் இயல்­பான பங்­க­ளிப்­பு­களை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­வது? இது ஒரு சிக்­க­லான நிலை­மையை எமக்­கி­டையே ஏற்­ப­டுத்தி விட்­டி­ருக்­கின்­றது. இவ்­வி­ட­யத்தில் உரிய கவனம் உட­ன­டி­யாகச் செலுத்­தப்­பட்டு இது தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வேண்டும்

    *  வடக்கு முஸ்லிம் மக்­களின் பரந்­த­ள­வி­லான பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய ஒரு சிவில் சமூக அமைப்­பி­னூ­டாக அம்­மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­யப்­பட்டு அவற்­றுக்­கான தீர்­வுகள் முன்­வைக்­கப்­ப­டுதல் சிறப்­பா­ன­தாக இருக்கும். இதற்கு ஏது­வான ஒரு பொறி­மு­றைக்­கான உத­விகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் சிறப்­பா­னது.

    *  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாகா­ணங்­களின் சிறு­பான்மை சமூ­கங்­களின் பிர­தி­நி­தித்­துவம் மற்றும் பங்­கு­பற்­றுதல் என்­ப­வற்­றோடு அவர்­களின் உரி­மை­களும் உரிய அமைப்பில் பேணப்­ப­டு­வ­தற்கு ஆவன செய்­யப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும்.

    *  இந்த நாட்டின் அர­சாங்கம், தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளா­கிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, வடக்கு தமிழ் மக்­களின் சிவில் சமூக அமைப்­பு­க­ளுக்கு வடக்கு முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்கள் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­துதல்.

    * சர்­வ­தேச சமூக மட்­டத்­திலும், ஐ.நா உட்­பட மற்­று­முண்­டான சர்­வ­தேச உதவி வழங்கும் நிறு­வ­னங்­க­ளுக்கும் வடக்கு முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான தொடர்­பினை வலுப்­ப­டுத்­துதல் போன்ற மிக முக்­கி­ய­மான மூன்று பரிந்­து­ரை­களை முன்­வைக்­கின்றோம். இத­னூ­டா­கவே இலங்­கையில் ஜன­நா­ய­கத்தை வலு­வூட்­டுதல், மனித உரி­மை­களைப் பேணுதல், சமூக நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துதல் என்­கின்ற பொறி­மு­றைக்குள் வடக்கு முஸ்­லிம்கள் போது­மான அளவு உள்­ளீர்க்­கப்­ப­டு­வ­தற்­கான ஏது­நி­லைகள் உரு­வாக்­கப்­படும் என்­பது எமது ஆழ­மான நம்­பிக்­கை­யாகும் என வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களால் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டன.

    இதற்கு பதி­ல­ளித்த அமெ­ரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ,  உங்­க­ளு­டைய கருத்­துக்­களை வரவேற்கின்றேன். இவை எனக்குப் புதிய விடயங்கள் அல்ல. சிங்கள மக்களிடம் தமிழ் மக்கள் உரிமை கேட்டுப் போராடுகின்றபோது தமிழ் மக்கள் தமக்குக் கீழ்வருகின்ற சிறுபான்மை மக்கள் விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்தல் வேண்டும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

    இலங்கையில் எல்லா மக்களும் அமைதியாக சமாதானமாக வாழவேண்டுமாக இருந்தால் ஒருவர் ஒருவரை மதிக்கின்ற நிலை உருவாக வேண்டும்.

     இன ரீதியான வர்க்க ரீதியான பிளவு ஆரோக்கியமானதல்ல. அமெரிக்க உதவி வழங்கும் நிறுவனத்திற்கும் வடக்கு முஸ்லிம்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்றினை நான் விரைவில் ஏற்பாடு செய்வேன்.

    இலங்கை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான சந்திப்பின்போது வடக்கு முஸ்லிம்கள் விடயம் தொடர்பில் நான் அவர்களோடு கலந்துரையாடுவேன் எனத் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கு முஸ்லிம்கள் பற்றி அரசாங்கத்துடன் பேசுவேன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top