மு.கா.செயலாளர் ஹஸன் அலி
வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். அதுவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என தமிழ் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ள நிலையில் முஸ்லிம் தரப்புகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இவ்விவகாரம் குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலியை நேர்கண்டோம். அவர் இதன்போது தெரிவித்த கருத்துக்களை வாசகர்களுக்காக தருகிறோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் யாப்பினை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி என்ன சொல்கின்றீர்கள்?
1978 ஆம் ஆண்டு பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக செயல்பட்டு புதிய யாப்பொன்றை அன்று முன்வைத்தது. 38 வருடங்களின் பின்னர் தற்போதைய பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக இயங்கி மீண்டும் ஒரு புதிய யாப்பைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
78 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாப்பில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்ட வரலாறுதான் பின்னர் பாரிய ஒரு இனப்பிரச்சினை யுத்தத்துக்கான களமாக உருமாறி இந்நாட்டை ரணகளமாக ஆக்கியதென்பது நாம் எல்லோரும் அறிந்ததொன்றாகும்.
அன்று விட்ட தவறுக்காக பிராயச்சித்தம் தேடுவதற்கு தற்போதைய அரசு முயற்சிக்கின்றது. ஆனால் அமையவிருக்கும் யாப்பு ஒரு முழுமையானதாக வடிவம் பெறுமா அல்லது ஏற்கனவே உள்ள திருத்தங்களின் தொடர்புகளாக அமையுமா என்ற விடயம் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எவ்வாறாயினும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் ஒரு முக்கியமான திருப்பு முனையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் தெளிவான உண்மையாகும்.

இந்தத் திருப்பு முனையில் உங்களது பயணம் எவ்வாறு அமையப் போகின்றது?
எமது பயணம் தீர்வைத்தேடும் கட்டத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றி 1986 இல் எமது ஸ்தாபகத் தலைவர் வெளியிட்ட கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக தீர்க்க தரிசனமாக குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் (கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை தேர்தல் தொகுதிகள்) என்பதனை அடித்தளமாகக் கொண்டு அதனுடன் மட்டக்களப்பு, மன்னார், திருமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை நிலத் தொடர்பற்ற வகையில் இணைத்த ஒரு தனி மாகாண அமைப்பு வேண்டும் என்பதுதான் எமது உச்சக்கட்ட நிலைப்பாடு.
இது பற்றி மறைந்த தலைவர் தமிழர் விடுதலை கூட்டணியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுமுள்ளார்.
அதனடிப்படையில் சில உடன்பாடுகளும் அவ்வப்போது காணப்பட்டு கைச்சாத்திடப்பட்ட ஆவணங்களும் உண்டு. இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு தனித் தேசியமாக அங்கீகரிக்கப்படுவதற்கும் அவர்களது தனித்துவ அடையாளம் சுயநிர்ணய உரிமை என்பன பாதுகாக்கப்படுவதற்கும் ஏற்றவகையில் அரசியல் யாப்பில் வலுவான மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
இதனை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்வதற்காகவே எமது கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதற்காகவே அன்றைய போராளிகள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இறங்கினர்.
தலைவர் அஷ்ரப் இந்த இலக்கை அடைவதற்கான பயணத்தில்தான் தனது உயிரையும் இழந்தார். அவரைப் போன்று பல போராளிகளும் தங்களது உயிர்களைப் பலி கொடுத்துள்ளனர். உடமைகள் இழந்து, இடம்பெயர்ந்து இன்றும் இன்னல்களை சுமந்தவர்களாக உள்ளனர்.
இதனைவிடப் பன்மடங்கு உயிர், உடமை இழப்புக்களையும் இடம்பெயர்வுகளையும் எமது சகோதர தமிழினம் சந்தித்துள்ளது. எனவேதான் வடக்கு கிழக்கின் எதிர்காலத்தை வளமாக்கும் பணியில் இரு சமூகங்களும் மனம் விட்டுப் பேசி ஒத்த கருத்துக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் எமக்கிடையில் ஏற்படும் அர்த்தமில்லாத கருத்து வேறுபாடுகள் எல்லாம் தேவையற்ற பரிமாணங்களில் ஊதிப் பெரிதாக்கி இருசமூகங்களையும் நிரந்தரமாகப் பிரித்து விடுவதற்கு காத்துக் கொண்டிருக்கும் சக்திகள் தமது இலக்கை இலேசாக அடைந்துவிடும்
முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அறிய முடிகின்றது. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?சில முஸ்லிம் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் வடக்குடன் கிழக்கு சேரக் கூடாது என்பதையே அதிகமாக தங்களது உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக கூறிக்கொள்வதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.
உண்மையில் பெரும்பான்மை சிங்கள தேசியவாதத்தின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பும் இதுதான். அப்படியானால் சிங்கள தேசியவாதிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு வலுச்சேர்க்கும் கோஷத்திற்கு முஸ்லிம்கள் முட்டுக் கொடுக்கின்றார்கள் என மூன்றாவது சமூகம் சந்தேகிக்க கூடிய ஒரு களம் உருவாக்கப்பட்டுள்ளதா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
சிங்கள சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒத்த கருத்தைக் கூறுவதில் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்வதற்கான உண்மையான காரணம் கடந்த 30 வருடங்களாக நடந்த கொடிய யுத்தத்தின் போது ஆயுததாரிகளின் அடாவடித்தனத்தில் அவர்கள் அனுபவித்த மறக்க முடியாத சம்பவங்களேயாகும்.
மீண்டும் ஒரு அச்சசூழல் வந்து விடுமோ என்ற ஒரு தடவை பயம் அவர்களை இன்றும் ஆட்டிப் படைப்பதுதான் கிழக்கு இணைப்பு விடயத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் கடும்போக்காகும். போர் முடிந்து 7 வருடங்கள் முடிந்த பின்னரும் போரின் பின்னர் ஆட்சியிலிருந்து கெடுபிடி அரசு அகற்றப்பட்டு 1 வருடம் பூர்த்தியான பின்னரும் கூட அச்ச நிலையினை அவர்களால் மறக்கமுடியவில்லை.
இவர்களது அச்சம் நியாயமானதாக இருந்தாலும் ஒரு சமாதானத்தை தேடும் பின்னணிக்கு இது பொருந்தாது என்பதே எனது அபிப்பிராயமாகும். புதியதோர் சூழலையும் நாம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தரப்பினரும் தமது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவும் வேண்டும்.
கிழக்கு வடக்குடன் இணையக் கூடாது என்பது அநேகமானவர்களின் கருத்தாக இருந்தாலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அதுதான் அவர்களின் பிரச்சினைகளுக்கான இறுதித் தீர்வாய் இருக்க முடியாது. எனவே இவர்கள் தமது எதிர்பார்ப்புகளையும் தெளிவாக முன்வைக்க வேண்டும்.
தற்போது உள்ள கிழக்கு மாகாணம் 1948ல் சுதந்திரம் கிடைத்த போது இருந்த எல்லைகளையும் இனப்பரம்பலையும் கொண்டதல்ல. அது எல்லைகள் உருமாற்றப்பட்டு பெரும்பான்மை சமூகத்தினரின் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட தொன்றாகும். இன்றைய கிழக்கின் மூன்றில் இரண்டு மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்துவருகின்ற போதிலும் மாவட்ட நிர்வாக மையங்களில் தமிழ் பேசும் ஒருவரை அரச அதிபராக நியமிக்க முடியாத இறுக்கமான நிலைமை மட்டும் தொடர்ந்தே வருகின்றது.
இத்தனைக்கும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் நமது வாக்குகளின் பங்களிப்பு முக்கிய பாத்திரத்தை வகிக்கத்தவறுவதேயில்லை. நாம் அடக்கி ஆளப்படுகின்றோம் என்ற எண்ணம் மட்டும் எம்மனதில் பதியாத வண்ணம் நாம் கச்சிதமாக மேய்க்கப்பட்டு வருகின்ற யதார்த்தத்தை எப்போதுதான் புரிந்துகொள்வோமோ தெரியாது.
1963ல் புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போதும், 1986ல் புதிய உள்ளூராட்சி மன்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் திட்டமிட்டு முஸ்லிம் பிரதேசங்கள் சிறிய பரப்பளவு நிலப்பிரதேசங்களுக்குள் முடக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. அண்மைக்கால யுத்த பின்னணியின் போதும் முஸ்லிம்களின் நிலங்கள் திட்டமிட்ட அரச நடவடிக்கைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தன்னிச்சையாக புதிய வர்த்தமான அறிக்கைகள் வெளியிடப்பட்டு பல்வேறு போலிக் காரணங்களை முன்வைத்து பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியுள்ள கிழக்கை அப்படியே அங்கீகரிப்பது ஆபத்தானது.
மேற்கூறப்பட்ட ஒவ்வொரு திருப்பங்களின் போதும் பாராளுமன்றத்தில் இருந்த நமது உறுப்பினர்கள் தங்களது எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் காத்த மௌனம் இன்று நமது தோள்களில் சுமையாக இறங்கியுள்ளது. இவ்வாறான தவறுகளை நாம் திருத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. ஜனப்பரம்பலுக்கேற்ற நிலப்பங்கீடுகள் மீள மாற்றியமைக்கப்படவேண்டிய சட்டங்கள் பற்றி நாம் வாதாட வேண்டும்.
இழந்த காணிகளை மீளப்பெறுவதற்காகவும், இனி விநியோகிக்கப்படவுள்ள காணிகள் எவ்வாறு பங்கிடப்படவேண்டும் என்ற கோட்பாட்டை வரைபு செய்வதற்காகவும் காணிகள் பறிக்கப்படும் நோக்குடன் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை வாபஸ் பெறச் செய்வதற்காகவும், முறையான எல்லை நிர்ணய சபைகள் அமைக்கப்படாமல் எம்மீது திணிக்கப்பட்ட பொய்யான பிரதேசசபை எல்லைகளை மீளமைப்பதற்காகவும் நாம் அணிதிரண்டு போராட வேண்டும். அதற்கான களங்கள் அமைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கிழக்கு இணைப்பைப் பற்றி மட்டும் வெறுமனே பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது வாக்குகளால் வெற்றி பெற்று நமது மண்ணில் நாமே ஆட்சி அமைக்க கூடிய ஒரு மாகாணத்தைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். நமது சக சகோதரர்கள் தமது இலக்கை மிகுந்த தியாகங்களுக்கு மத்தியில் ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும் எலும்புத்துண்டுகளுக்கும் விலை போகாமல் வீரியத்துடன் அடைந்துள்ளதைக் கண்டு பாடங்களை கற்றுக் கொள்வோமாக.

நிலத் தொடர்பற்ற முறையில் நிர்வாக எல்லைகளை அமைப்பது சாத்தியமா? நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படாதா?
இல்லவே இல்லை. எல்லா நிர்வாகங்களும் ஒரே நாட்டின் கூறுகள்தான். ஒவ்வொரு பிரதேசமும் தனித்தனியாக நிர்வாகங்களை மேற்பார்வை செய்து கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கும். உலகின் பல பாகங்களில் இவ்வாறான முறைமை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. நமது அண்டைய நாடாகிய இந்தியாவில் பாண்டிச்சேரி மாநில அரசு இவ்வாறு அமைந்துள்ளது. 492 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும், 82 லட்சம் சனத்தொகையினரையும், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளைப் பேசும் மக்களையும் கொண்ட இந்த மாநிலத்தின் எல்லைகள் நான்கு வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன.
பாண்டிச்சேரி மாநிலம் என்பது முன்னர் பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளாகும். பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே, யானம் ஆகிய பகுதிகள் தென் இந்தியாவில் பரந்து காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் இடையில் உள்ள தூரம் சில நூறு கிலோ மீட்டர்களாகும். அதனோடு ஒத்துப்பார்க்கையில் நமது பிரதேசங்கள் அனைத்தும் ஒரு சில மணித்தியாலங்களில் அடையக் கூடியனவாகவே இருக்கும். எனவே நிலத்தொடர்பற்ற மாநிலங்கள் ஒன்றாக நிர்வாக ரீதியாக இயங்குவதில் எவ்வித சிக்கலும் இருக்கமாட்டாது.

உங்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலைமை ஏற்பட்டால்…
இது முக்கியமான ஒரு கேள்வியாகும். எதிர்பார்ப்புக்கள் கிடைக்காது போனால், அதற்கான அனைத்துத் தவறுகளையும் கட்சியே பொறுப்பேற்க வேண்டும். நமது இலக்குகளை அடைவதற்கான பயணம் பிழையாக வழி நடத்தப்பட்டதுதான் அதற்கான முக்கிய காரணியாகும்.
எமது இலக்குகள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதே தீர்மானிக்கப்பட்டவையாகும். இடையில் புகுத்தப்பட்டதல்ல.
ஒவ்வொரு தேர்தல்களின் போதும் முக்கியமான அரசியல் நகர்வுகளின்போதும், மாநாடுகளின் போதும் பேச்சு வார்த்தைகளின் போதும், தெட்டத் தெளிவாக நமது இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தங்களாகவும், தீர்மானங்களாகவும், ஆலோசனைகளாகவும் நமது இலக்குகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கான புனிதமான பயணம் முறையாக வழி நடத்தப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் திருப்தியான முடிவை எட்டுவதில் எவ்வித சிரமமும் இருக்கமுடியாது. தொடந்தேர்ச்சியாக அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை அனுபவித்துவந்த நமது பயணம் சோதனைக்குட்படுத்தபடவேண்டிய தவிர்க்க முடியாத கட்டத்தை அடைகின்றது.
தேடிவந்த பதவிகளையெல்லாம் தியாகம் செய்து தனது சொந்தக் காலில் நின்று கொண்ட நமது சகோதர சமூகம் உச்சத்தை நோக்கி வெகுவாக முன்னேறிக்கொண்டிருக்கையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம் என்பது வெகு விரைவில் வெளிப்பட்டுவிடும்.
பாதைகளை மாற்றுவதற்குப் பதிலாக பாதணிகளை மட்டும் மாற்றிக் கொள்ளும் நமது பழக்கங்களை விட்டு வெளியேறி புதிய தலைமுறைகளுக்கு இடம் கொடுக்க நாம் தயாராக வேண்டும். உடம்பைப் பராமரிப்பதை விட்டு உடைகளில் மட்டும் கவனம் செலுத்தும் மேனி மினுக்கல் ஒரு விடுதலை போராட்டத்துக்கு விமோசனம் தராது.

நன்றி -விடிவெள்ளி

0 comments:
Post a Comment