(
எம்.ஐ,எம். அஸ்ஹர்)
சுகாதார அமைச்சு
கல்வியமைச்சுடன் இணைந்து பல் சுகாதாரத்தை பாடசாலை
மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள பாடசாலைகளில் எழுந்தமான முறையில் குறிப்பிட்ட
வயதெல்லையில் மாணவர்களினதும் பாடசாலை சூழலிலுள்ளவர்களினதும்
பற்சுகாதாரம் சம்பந்தமான ஒரு கணக்கெடுப்பு செயல் திட்டம் ஒன்றினை இம்மாதம் 6 ஆம் திகதி
முதல் 9 ஆம் திகதி வரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இதனடிப்படையில்
கல்முனை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி மாணவர்களின் பற்சுகாதார கணக்கெடுப்பு பற்சுகாதார
பொறுப்பதிகாரி டாக்டர் கே.எம்.லத்தீப் தலைமையில் இன்று கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி பற்சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது,
இக்கணக்கெடுப்பு
நிகழ்வில் சுகாதார அமைச்சைச் சேர்ந்த வைத்திய அதிகாரி டாக்டர் புஸ்பிகா அபேசேகர , சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ,எல்.எம்.பாறூக் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பற்சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி டாக்டர்
திருமதி எம்.எஸ்.எஸ்.ஜஹான் , பற்சிகிச்சையாளர்களான ஸாஹிரா , ஜனலோஜினி , கல்லூரி சிரேஸ்ட
ஆசிரியர் எம்.ஐ,எம்.அஸ்ஹர் , சுகாதார அமைச்சைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள் . பொது
சுகாதார பரிசோதகர் முஹம்மட் நியாஸ் மற்றும் தாதி உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment