• Latest News

    September 24, 2016

    நான்கு பிரதான அம்சங்களுடன் தயாராகும் உள்ளக பொறிமுறை

    ஜெனிவா மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­
    வுள்ள ஐக்­கிய நாடு­களின் 34ஆவது கூட்டத் தொடரை எதிர்­கொள்ளும் வகையில் அர­சாங்கம் திட்­டங்­களை வகுத்­து­வ­ரு­கின்­றது.
    குறிப்­பாக அடுத்­த­வ­ருடம் பெப்­ர­வரி மாத­மா­கும்
    ­போது நான்கு பிர­தான அம்­சங்­க­ளைக்­கொண்ட உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் வடி­வத்தை தயா­ரித்­து­வி­டு­வ­தற்கு அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்­றது. அதா­வது காணாமல் போனோர் குறித்த அலு­
    வ­லகம் உண்­மையை கண்­ட­றியும்
    ஆணைக்­குழு நட்­ட­ஈடு வழங்கல் மீள்­நி­க­ழா­மையை உறு­தி­ப­டுத்தல் ஆகிய நான்கு அம்­சங்­களை பிர­தா­ன­மா­கக்­கொண்டே அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை தயா­ரித்­து­வ­ரு­கின்­றது.
    குறிப்­பாக அடுத்­த­வ­ருடம் பெப்­ர­வரி மாத­மா­கும்­போது உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் இறுதி வடிவம் தயா­ரிக்­கப்­பட்­டு­விடும் என்றும் அதன் பின்னர் சட்­ட­மூ­லங்கள் நிறை­வேற்­றப்­பட்டு உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பான வரைபு ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
    பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­முறை விட­யத்தில் மக்­களின் கருத்­த­றியும் செயற்­பாடு தொடர்­பான அறிக்கை விரைவில் அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள நிலையில் ஒக்­டோபர் மாதம் நடுப்­ப­கு­தியில் விசா­ரணை பொறி­மு­றையின் இறுதி வடி­வத்தை தயா­ரிக்கும் பணி­களை அர­சாங்கம் ஆரம்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
    அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­மு­றை­யா­னது நான்கு அம்­சங்­களை கொண்­ட­தாக அமை­ய­வுள்ள நிலையில் அதன் முத­லா­வது கட்­ட­மாக தற்­போது காணாமல் போனோர் தொடர்­பான அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.
    அதற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து விரைவில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு நிறு­வப்­ப­ட­வுள்­ளது. தென்­னா­பி­ரிக்­காவில் செயற்­பட்ட உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவைப் போன்­ற­தான ஒரு ஆணைக்­கு­ழுவே இலங்­கையின் தன்­மை­க­ளுக்கு ஏற்ப நிறு­வப்­ப­டு­மென அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது.
    அடுத்­த­தாக மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடும் இடம்­பெ­ற­வுள்­ளது. மேலும் மீள்­நி­க­ழாமை தொடர்­பான செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இறு­தி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அத­னூ­டாக சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வைக் காண உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.
    இவ்­வாறு பல்­வேறு மட்­டங்­களில் விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­க­கப்­ப­ட­வுள்­ளது. எனினும் இந்த செயற்­பாட்டின் இறுதிக் கட்­டத்­தி­லேயே விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­று­வார்­களா? இல்­லையா? என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும்.
    கடந்த வருடம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
    அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 33 ஆவது கூட்டத் தொடரில் பிரே­ரணை அமு­லாக்கம் தொடர்­பான வாய்­மூல அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆண­யைாளர் செய்ட் அல் ஹுசேன் சமர்ப்­பித்­தி­ருந்தார்.
    அதன்­படி அடுத்த வருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை அமுலாக்கம் குறித்த இறுதி அறிக்கை மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளார்.
    அதாவது ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றியது என்பது தொடர்பான எழுத்துமூல அறிக்கையை 34 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணையாக செய்ட் அல் ஹுசேன் முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான்கு பிரதான அம்சங்களுடன் தயாராகும் உள்ளக பொறிமுறை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top