வட மாகாண மக்கள் பிரதிநிதிகளின் தீவிரமான
கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ளாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ரன்தம்பே பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறிப்பாக வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை
ஒருபோதும் அகற்ற மாட்டோம் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,
வடக்கின் பிரதிநிதிகளது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பதில் வழங்கவேண்டிய
அவசியம் கிடையாதென குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அண்மையில் யாழில் நடைபெற்ற
மாபெரும் பேரணி குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகள்
நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதாகவும், மக்களின் மனோநிலையில் தேவையற்ற
குழப்பங்களை ஏற்படுத்துவதாக அமைவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment