அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்
பிளவை எதிர்நோக்கி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை நியமித்து
கொள்வதற்காக கட்சிக்குள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.
காங்கிஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி மற்றும்
கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இந்த போராட்டத்தில் முன்னிலை
கொண்டு செயற்பட்டு வருவதாக கிழக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள்
கூறுகின்றன.
காங்கிரஸின் தவிசாளரான பஷீர் சேகுதாவூத் கட்சியின் நிதி
நடவடிக்கைகள் குறித்து கட்சியின் அதியுயர் பீடம் மற்றும்
தலைமைத்துவத்திடம் முன்வைக்கும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்காத
நிலையில் இந்த பிளவு உக்கிரமடைந்துள்ளதாக பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை அதன் தலைவரான
அமைச்சர் ஹக்கீம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்காது
போனால், கட்சிக்கு கிழக்கை சேர்ந்த புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார்
அல்லது அடுத்த தேர்தலில் கட்சியின் அணி ஒன்று தனித்து போட்டியிடும் நிலைமை
உருவாகும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment