• Latest News

    January 22, 2018

    கதிர்காமம் சம்பவம் – 58 பேர் பிணையில் விடுதலை

    திர்காமம் பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்னர் கைது செய்யப்பட்ட 58 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    குறித்த நபர்கள் 2 இலட்சம் ரூபா பிணை மற்றும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி குறித்த நபர்கள் எதிர்வரும் 28ம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதித்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையம் சமூகமளிக்க வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நிறைவடையும் வரை இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 20 திகதி இரவு பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் நேற்று கதிர்காமம் பொலிஸிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    குறித்த ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கதிர்காமம் சம்பவம் – 58 பேர் பிணையில் விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top