• Latest News

    January 19, 2018

    தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு புதிய சட்ட விதிகள்

    திர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நடாத்தப்படும் பிரசார கூட்டத்திற்கு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

    அதன்படி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 400 மீற்றர் உட்ப்பட்டட்ட பகுதியை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தோறணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் கூட்டம் நடைபெறும் பகுதிக்குள் மாத்திரமே இடம் பெறவேண்டும் எனவும் நீண்டகாலத்திற்கு கட்டவுட் காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டத்தை மதிக்கும் தேர்தலுக்காக பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும்
    தேர்தல் சட்டம் மீறப்படுவது தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு சட்ட விரோதமாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மீதும் இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் செலவில் விநியோகிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்தவற்றை ஒட்டுவதற்க்கான அறிவிப்பு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    எவரேனும் தேர்தல் விதி முறைகளை மீறும் குற்றச்சாட்டு இருக்குமாயின் அவற்றை சமூக இணைத்தளங்களில் வெளியிடுவது அல்ல பொலிஸாருக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்ப்ப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு புதிய சட்ட விதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top