சாய்ந்தமருது பிரதேச மக்கள் மின்சார விளக்குகளை உறங்கு நிலையில் வைத்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதற்கு ஒன்று கூடிய சம்பவம் ஒன்று நேற்று இரவு (28.01.2018) நடைபெற்றுள்ளது. இதே வேளை. 03 மோட்டார் சைக்கிள்கள், 05 துவிச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று இரவு விளையாட்டுத்துறைத் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருது இல்லத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர் வழங்கல், வடிகான் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தர இருப்பதாக பரவிய செய்தியையடுத்து சாய்ந்தமருது பிரதேச பொது மக்கள் அவரது வருகைக்கு தமது எதிர்ப்பை காட்டுவதற்காக வீடுகளிலும், தெருக்களிலும் இணைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகளை உறங்கு நிலையில் வைத்தார்கள். அத்தோடு ஆயிரக் கணக்கானவர்கள் பிரதான வீதியின் இரு மருங்கிலும் திரண்டு நின்றார்கள். இதனால், சாய்ந்தமருது பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாய்ந்தமருது பிரதேசம் இருளிளல் மூழ்கிக் காணப்பட்டது.

இச்சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தமது சாய்ந்தமருது இல்லத்திற்கு பொலிஸார், அதிரடிப் படையினர், இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தந்துள்ளார். ஆயினும், பிரதி அமைச்சர் ஹரீஸுடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் ஆதரவாளர்களின் மோட்டார் சைக்கிள்கள், துவிச் சக்கரவண்டிகள் ஆகியவற்றை மாற்றுக் கட்சியினரின் ஒரு சில ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளார்கள். 03 மோட்டார் சைக்கிள்களும், 05 துவிச்சக்கர வண்டிகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள்தான் மேற்கொண்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 comments:
Post a Comment